ETV Bharat / state

6 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை! - அமைச்சர் விஜய பாஸ்கர்

author img

By

Published : Jun 13, 2020, 4:02 PM IST

vijayabaskar
vijayabaskar

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 6 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில் இன்று 2,000 ஆயிரம் செவிலியருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இவர்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு, இன்றே பணியில் இணைகிண்றனர். சென்னையில் 254 வாகனங்களில் மருத்துவக் குழுக்கள் நேரடியாகக் களத்திற்குச் சென்று பணியாற்றிவருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 6 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், இந்திய அரசு மருத்துவர்கள் சங்கம் கரோனா பாதித்த மருத்துவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அனைவருக்கும் முறையான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.