ETV Bharat / state

வடசென்னையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

author img

By

Published : Jan 17, 2022, 3:00 PM IST

வடசென்னையில் கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையின் மொத்த பாதிப்பில் நான்கில் ஒரு பங்கு பாதிப்பு வடசென்னையில் பதிவாகிறது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு அரசு கரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் வடசென்னை பகுதிக்குள்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஜனவரி 16 ஆம் தேதி வடசென்னை மண்டலங்களில் 14,669 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த குறிப்பிட்ட நாள்களில் வடசென்னை மண்டலங்களில் 19 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மாநகராட்சி அறிக்கை

திருவொற்றியூர் மண்டலத்தில் கடந்த 1 ஆம் தேதி 56 ஆக இருந்த தொற்று பாதிப்பு 10 ஆம் தேதி 583 ஆகவும், 16 ஆம் தேதி 1,336 ஆகவும் பதிவாகி உள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை திருவொற்றியூர் மண்டலத்தில் கரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணலி மண்டலத்தில் கடந்த 1 ஆம் தேதி 16 ஆக இருந்த தொற்று பாதிப்பு 10 ஆம் தேதி 399 ஆகவும், 16 ஆம் தேதி 975 ஆகவும் பதிவாகி உள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மணலி மண்டலத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

கரோனாவால் உயிரிழப்பு

மாதவரம் மண்டலத்தில் கடந்த 1 ஆம் தேதி 68 ஆக இருந்த தொற்று பாதிப்பு 10 ஆம் தேதி 781 ஆகவும், 16 ஆம் தேதி 1,797 ஆகவும் பதிவாகி உள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மாதவரம் மண்டலத்தில் கரோனா தொற்றால் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் கடந்த 1 ஆம் தேதி 156 ஆக இருந்த தொற்று பாதிப்பு 10 ஆம் தேதி 1,749 ஆகவும், 16 ஆம் தேதி 2,989 ஆகவும் பதிவாகி உள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

ராயபுரம் மண்டலத்தில் கடந்த 1 ஆம் தேதி 270 ஆக இருந்த தொற்று பாதிப்பு 10 ஆம் தேதி 2,435 ஆகவும், 16 ஆம் தேதி 3,610 ஆகவும் பதிவாகி உள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ராயபுரம் மண்டலத்தில் கரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவிக நகர் மண்டலத்தில் கடந்த 1 ஆம் தேதி 190 ஆக இருந்த தொற்று பாதிப்பு 10 ஆம் தேதி 1,926 ஆகவும், 16 ஆம் தேதி 3,962 ஆகவும் பதிவாகி உள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை திருவிக நகர் மண்டலத்தில் கரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் லேசாக அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீவர அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு மட்டும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனை, சின்ன ஸ்டான்லி போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: எம்ஜிஆர் என்னும் தாரக மந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.