ETV Bharat / state

'நம்மை மனிதர்களாக மாற்றக்கூடிய சக்தி இவர்களுக்குத்தான் உள்ளது!'

author img

By

Published : May 8, 2019, 7:55 AM IST

சென்னை: நம்மை மனிதர்களாக மாற்றக்கூடிய சக்தி குழந்தைகளுக்குத்தான் உள்ளது என நடிகர் ரஜினி காந்தின் மனைவி லதா தெரிவித்தார்.

நம்மை மனிதர்களாக மாற்றக்கூடிய சக்தி குழந்தைகளுக்கு உள்ளது - லதா ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் ராஜிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஸ்பீச் ஆஃப் சைல்டு (Speech of child) என்ற அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறார். தற்போது இந்த அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களை தன்னுடன் ஒன்றிணைத்து செயல்பட உள்ளது.

அதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்பீச் ஆஃப் சைல்டு நிறுவனத்தின் தலைவர் லதா ரஜினிகாந்த், பல்வேறு தொண்டு நிறுவனங்களின் அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, லதா ரஜினி காந்த் பேசுகையில், 'எத்தனை மாதங்களாக நாங்கள் புதிய பட்டியல் போட்டாலும் ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து எங்களால் பட்டியலிட முடியவில்லை. ஏனென்றால் மனம் முழுவதும் வலியாக உள்ளது.

சென்ற மாதம் நடந்தது இந்த மாதம் நடைபெறக் கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் காணாமல் போவது, கடத்தல், ஆதரவின்றி தவிப்பது சமூகத்தில் சாதாரண ஒரு நிகழ்வு போன்று அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நம்மைச் சுற்றி உள்ள குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெற்றோரின் முதன்மையான கடமை. அவர்களுக்கு சரியான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொடுப்பது நமது கடமை.

நாமும் குழந்தைப் பருவத்தைக் கடந்துதான் வந்துள்ளோம். எது உங்கள் குழந்தைக்கு வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்ற வேண்டும்.

நம்மை மனிதர்களாக மாற்றக்கூடிய சக்தி குழந்தைகளுக்கு உள்ளது - லதா ரஜினிகாந்த் பேச்சு

குழந்தை என்பது தெய்வத்தின் சொரூபம்; நம்மை மனிதர்களாக மாற்றக்கூடிய சக்தி குழந்தைகளுக்கு உள்ளது. எதிர்பார்ப்பே இல்லாமல் பழகுவது குழந்தைகள். அவர்கள் பொக்கிஷம். சமூகம் ஒழுங்காக இருந்தால் குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள்' எனத் தெரிவித்தார்.

சமுதாயம் ஒன்றாக இருந்தால் குழந்தைகள் பாதுகாப்பாக பார்கள் லதா ரஜினிகாந்த் பேச்சு

Speech of child என்ற அமைப்பை துவங்கி லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார் தற்போது இந்த அமைப்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து செயல்பட உள்ளது அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பீஸ் ஆஃப் child நிறுவனத்தின் தலைவர் லதா ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய லதா ரஜினிகாந்த் பட்ட குழந்தைகள் குறித்து எங்களால் பட்டியலிட முடியவில்லை ஏனென்றால் ஏனென்றால் ஏனென்றால் மனம் முழுவதும் வழியாக உள்ளது எத்தனை மாதங்களாக நாங்கள் list போட்டாலும் ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது சென்ற மாதம் நடந்தது இந்த மாதம் நடைபெற கூடாது என்று நினைக்கிறோம் ஆனால் தொடர்ந்து பிரச்சனை கடத்தல் குழந்தைகள் காணாமல் போவது ஆதரவின்றி தவிப்பது சமூகத்தில் சாதாரண ஒரு நிகழ்வு போன்று அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது குழந்தைகளை பாதுகாப்பது நம்முடைய கடமை நாம் ஒன்றும் பெரிதாக தியாகம் செய்துவிட வில்லை நம்மை சுற்றி உள்ள குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெற்றோர்களின் முதன்மையான கடமை அவர்களுக்கு சரியான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொடுப்பது நமது தலையாய கடமை நாமும் குழந்தைப் பருவத்தைக் கடந்து தான் வந்துள்ளோம் குழந்தையாக இருக்கும்போது என்ன பிரச்சினையில் இருக்கிறது என்ன வேண்டும் என்பது போன்றவை யாரும் நமக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை அவை நமக்கே தெரியும் எது உங்கள் குழந்தைக்கு வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்ற வேண்டும் குழந்தை என்பது தெய்வத்தின் சொரூபம் நம்மை மனிதர்களாக மாற்றக்கூடிய சக்தி குழந்தைகளுக்கு உள்ளது இதை நம்மால் செய்ய இயலாது எதிர்பார்ப்பே இல்லாமல் பழகுவது குழந்தைகள் அவர்கள் பொக்கிஷம் உங்களைப் பாதுகாக்க மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தேவை சமூகம் ஒழுங்காக இருந்தால் குழந்தைகள் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.

பேட்டி மோஜோவில் அனுப்புகிறேன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.