ETV Bharat / state

Omicron scare: 'ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்பு - மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிருங்கள்' - ஸ்டாலின்

author img

By

Published : Dec 24, 2021, 9:34 PM IST

Omicron scare: பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, கரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் கரோனா தடுப்பு நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர்  ஸ்டாலின் வேண்டுகோள்
முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: Omicron scare: தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையிலிருந்து வருகிறது.

இந்நிலையில், பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்; தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர்.24) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

முதலமைச்சர்  ஸ்டாலின் வேண்டுகோள்
முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

தொடர்ந்து அனுமதிக்க முடிவு

அதில், 'நம் மாநிலத்தில், கரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் பரவலாக்கத்தினை குறைத்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மருத்துவ வல்லுநர்கள் வழங்கினார்கள்.

மருத்துவக்குழுவின் ஆலோசனையின்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால், கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றிச் செயல்பட வேண்டும்.

கரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ வல்லுநர்கள்

இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களான உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் மனோஜ் முர்ஹேக்கர், துணை இயக்குநர் மருத்துவர் பிரதீப் கவுர்,

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஜே.வி. பீட்டர், உலக சுகாதார மையத்தின் தென் மண்டலக் குழுத் தலைவர் மருத்துவர் கே.என். அருண்குமார், இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பழனிச்சாமி, ஓய்வு பெற்ற நகரச் சுகாதார அலுவலர் மருத்துவர் பி. குகானந்தம், அப்போலோ மருத்துவமனையின் தொற்றுநோய் வல்லுநர் மருத்துவர் வி. இராமசுப்ரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதையும் படிங்க: Night Curfew: தமிழ்நாட்டிற்கு இரவு நேர ஊரடங்கு அவசியமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் புதுத்தகவல்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.