ETV Bharat / state

தென்காசிக்கு ரயில் பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்!

author img

By

Published : Dec 6, 2022, 12:37 PM IST

தென்காசியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ரயில் பயணம் மேற்கொள்கிறார்.

தென்காசிக்கு ரயில் பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்
தென்காசிக்கு ரயில் பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்

சென்னை: தென்காசியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 8 ஆம் தேதி கலந்து கொள்கிறார்.

இதற்காக நாளை (டிச.7) இரவு முதலமைச்சர், சென்னையிலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசிக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 8:40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் (டிச.8) காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும்.

பின்னர் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முதலமைச்சர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ரயிலில் தென்காசி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அன்றிரவு முதலமைச்சர் மதுரையில் தங்குகிறார்.

பின்னர் டிசம்பர் 9 ஆம் தேதி காலை மதுரை மாநகராட்சி வளைவை திறந்து வைக்கும் அவர், அம்பேத்கர் சிலையையும் திறந்து வைக்கிறார். அன்றைய தினமே முதலமைச்சர் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இதையும் படிங்க: 'ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.