ETV Bharat / state

என்எம்சி அறிவிப்பை நிறுத்தி வைக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 10:44 AM IST

MK Stalin letter to PM Modi: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/6E1oVX2rJI

    — CMOTamilNadu (@CMOTamilnadu) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தேசிய மருத்துவ ஆணையம் 2024-2025ஆம் ஆண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு பல்வேறு புதிய விதிமுறைகளை வகுத்து அறிவித்திருந்தது. அதில் குறிப்பாக, 10 லட்சம் மக்கள்தொகைக்கு எம்பிபிஎஸ் படிப்பில் நூறு மருத்துவ இடங்கள் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும், ஏற்கனவே 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியின் கட்டமைப்பு செய்திகளை குறித்து கூடுதலாக மருத்துவ இடங்களை வழங்குவதற்கும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே மக்கள் தொகையை விட அதிக அளவில் மருத்துவக் கல்லூரியில் இடங்கள் உள்ளது என்பதால், புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதில் பெரும் சிக்கல் எழுந்தது. மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தை செயல்படுத்த முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரும் நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பால் தடை ஏற்படும் நிலைமை உள்ளது. இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.4) கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென்றும், இது தொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நியூஸ்கிளிக் விவகாரம்; வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை பத்திரிகையாளர் மன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.