ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரோபோக்கள், மோப்ப நாய்களுடன் திடீர் வெடிகுண்டு சோதனை.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 7:15 AM IST

ரோபோக்கள், மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தில்  நடந்த ஒத்திகை
ரோபோக்கள், மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தில் நடந்த ஒத்திகை

Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் திடீரென மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ரோபோக்கள், மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தில் நடந்த ஒத்திகை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று (நவ.24) டெர்மினல் 4 பகுதியில் திடீரென 30க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்து, வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.

இதில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் அதிநவீன வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகள், ரோபோக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும், விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் பயணிகள் காத்திருக்கும் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

திடீரென அதிரடியாக இந்த சோதனை நடத்தப்பட்டதால், விமான நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதட்டம் அடைந்தனர். சென்னை விமான நிலையத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எப்போழுதும் தீவிரமாக கண்காணிப்பிலும், விமான நிலைய பாதுகாப்புக்காக தங்கள் வசம் வைத்திருக்கும் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள், விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த ஒத்திகை நடைபெற்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் மர்ம பை இருந்தால் எப்படி சோதனை செய்வது மற்றும் வெடிகுண்டுகள் இருந்தால் அதனை கைப்பற்றிக் கொண்டு செல்வதற்கான பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் எப்படி கொண்டு செல்வது என ஒத்திகையும் நடைபெற்றது.

விமான நிலையத்தில், ஏற்கனவே 18 கிலோ வரை வெடி பொருட்களைக் கையாளும் வாகனம் எந்த நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனங்களில் உள்ளே வைக்கப்படும் வெடிகுண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி வெடிக்கச் செய்தாலும், எந்த விதமான சேதமும் ஏற்படாது என்பது குறிப்பபிடதக்கது.

அதுமட்டுமின்றி, வீரர்கள் கையால் வெடிகுண்டுகளை எடுக்காமல், ரோபோட் மூலம் எடுக்கும் இயந்திரமும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டது, மேலும், மோப்ப நாய்கள் இந்த ஒத்திகையில் கலந்து கொண்டது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபத் திருவிழா எதிரொலி - சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வேயின் முழு லிஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.