ETV Bharat / state

திறமை அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது குடும்ப அரசியல் இல்லை - துரை வைகோ அதிரடி!

author img

By

Published : May 27, 2022, 5:35 PM IST

திறமை அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது  குடும்ப அரசியல் இல்லை
திறமை அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது குடும்ப அரசியல் இல்லை

கட்சித்தொண்டர்கள் நிர்வாகிகளை திறமை அடிப்படையில் தேர்ந்தெடுப்பது குடும்ப அரசியல் இல்லை என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான "தாயகத்தில்" மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோவின் அலுவலகத்தை, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, 'தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ்நாட்டின் தேவைகளைத் தான் பேசி உள்ளார். கச்சத்தீவை மீட்க வேண்டியதை சுட்டிக்காட்டி உள்ளார்.

10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மதுரவாயல் பாலம், சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை என 31 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்ததால் எதிர்க்கவில்லை. கடந்த காலங்களில் நீட் தேர்வு போன்ற பிரச்னைகளில் மாணவர்கள் உயிரிழந்ததால் எதிர்ப்புத்தெரிவித்து கறுப்புக்கொடி காட்டினோம். நீட், பெட்ரோல் டீசல் விலை, போன்ற பிரச்னைகளில் இன்றும் ஒன்றிய அரசை எதிர்க்கிறோம்'' என விளக்கமளித்தார்.

மேலும் அவர், 'தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை திறமை அடிப்படையில் தேர்ந்தெடுப்பது குடும்ப அரசியல் இல்லை. கடந்த ஆட்சியில் சாத்தான்குளம், பொள்ளாச்சி சம்பவம் போன்ற பிரச்னைகளில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் பிரச்னையில் தவறுகள் ஏற்பட்டால் காவல் துறையில் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் தேசிய கல்விக்கொள்கையில் அமித்ஷா கூறியது அப்படியே உள்ளது. இந்த தேசிய கல்விக்கொள்கைகளும் அதேதான் கூறியிருக்கிறது. தேசியக் கல்விக்கொள்கை செயல்பட்டால் ஒன்று மாநில மொழி இருக்கும். மற்றொன்று ஆங்கிலம் இல்லாமல் ஹிந்தி மொழியாக இருக்கும்' என துரை வைகோ கூறினார்.

இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.