தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கரோன வைரஸ் பற்றி அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள மருத்துவ நிபுணர்கள் நேரிலும், மற்ற மாவட்டத்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டனர். இதில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நேற்று (ஏப்ரல் 9) முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பின்போது, கரோனா நோயின் தன்மையை பற்றி மருத்துவக் குழுவுடன் ஆலோசித்த பிறகே ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்றது..
ரேபிட் டெஸ்ட் கிட் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் அதை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது, அதிக அளவு எவ்வாறு சோதனை செய்வது உள்ளிட்டவை பற்றி விரிவாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
மேலும், நாளை (ஏப்ரல் 11) பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கரோனா நோய் தன்மை பற்றி விரிவாக தெரிவிக்க மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி... சைக்கிளில் புதுச்சேரிக்கு பயணம் - மனைவி மீதான கணவனின் காதல்