ETV Bharat / state

1,024 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Sep 29, 2022, 7:23 AM IST

1,024 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
1,024 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

உயர் கல்வித்துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்வு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 27.11.2019 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து 8.12.2021 முதல் 13.12.2021 வரை கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

அதன்படி சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று (செப் 28) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 11பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

1,024 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் க. லட்சுமிபிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நியாயவிலைக் கடைகளில் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.