தமிழ்நாட்டில் மேலும் 5 கோயில்களில் மருத்துவ மையங்கள் திறப்பு

author img

By

Published : Dec 2, 2022, 1:34 PM IST

5 கோயில்களில் புதிதாக மருத்துவ மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

சென்னை: தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரியம்மன் கோயில், மதுரை கள்ளழகர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆகிய 5 கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (டிச.2) திறந்து வைத்தார்.

2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 5 கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் உள்ளன.

இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக இருக்கும். இதற்கான செலவினங்கள் அந்தந்த கோயிலின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.