ETV Bharat / state

ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்துவைத்த முதலமைச்சர்!

author img

By

Published : Oct 5, 2020, 2:52 PM IST

மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்
மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்

சென்னை: மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை சார்பில் 28 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

மேலும், 15 கோடியே 39 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 காவலர் குடியிருப்புகள், நான்கு காவல் நிலையங்கள், இரண்டு காவல் துறை கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான ஒரு குடியிருப்பு, இரண்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், காவல் துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில செயல்பாட்டு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூக ஊடக மையம் ஆகியவற்றைத் திறந்துவைத்தார்.

சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலி காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்கள். இக்குடியிருப்பானது தரை மற்றும் 13 தளங்களுடன், மின்தூக்கிகள், தீயணைப்பு உபகரணங்கள், ஆழ்துளை கிணறு, குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, இடிதாங்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் - பெரும்பாக்கம், சேலம் மாவட்டம் - மகுடஞ்சாவடி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - பாச்சல் ஆகிய இடங்களில் 7 கோடியே 10 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 காவலர் குடியிருப்புகள், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டம் - வாலிநோக்கம் ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள், சேலம் மாவட்டம் - வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையம், தென்காசி மாவட்டம் - தென்காசி போக்குவரத்து காவல் நிலையம், என 3 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையக் கட்டடங்கள், சென்னை மாவட்டம், மயிலாப்பூர், காவல்துறை தலைமை அலுவலகத்தில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில செயல்பாட்டு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூக ஊடக மையம் என மொத்தம், 28 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசின் பகுதி பங்கு ஈவுத் தொகையை பெற்றுகொள்ளும் முதலமைச்சர்
தமிழ்நாடு அரசின் பகுதி பங்கு ஈவுத் தொகையை பெற்றுகொள்ளும் முதலமைச்சர்

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2019-20ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பகுதி பங்கு ஈவுத் தொகையான ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் இன்று தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ம.நா. மஞ்சுநாதா வழங்கினார்.

இதையும் படிங்க: கஜாவின் மிச்சத்தையும் சூறையாடும் காண்டாமிருக வண்டுகள்... கவலையில் தென்னை விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.