ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட்: மெய் சிலிர்க்க வைத்த தமிழ் கலாச்சாரத்தின் மெய்நிகர் காட்சி!

author img

By

Published : Jul 29, 2022, 7:52 AM IST

44 - வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வில், தமிழ் கலாச்சாரத்தின் மெய்நிகர் காட்சிகள் வெளியாகி அரங்கை அதிர வைத்தது.

செஸ் ஒலிம்பியாட்: மெய் சிலிர்க்க வைத்த தமிழ் கலாச்சாரத்தின் மெய்நிகர் காட்சி!
செஸ் ஒலிம்பியாட்: மெய் சிலிர்க்க வைத்த தமிழ் கலாச்சாரத்தின் மெய்நிகர் காட்சி!

சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,000 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதன் தொடக்க நிகழ்வு, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தலைவர் ஆர்காடி ஓர்கோவிச் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.

40 நாட்கள் ஜோதி பவனி: அது மட்டுமல்லாது நடிகர்களான ரஜினிகாந்த், கார்த்தி மற்றும் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதலாவது ஜோதி ஓட்டத்தை புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி, ஜூன் 19, 2022 அன்று தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா

கடந்த 40 நாட்களாக சுமார் 20,000 கி.மீ. தொலைவிற்கு சிறப்புமிக்க 75 இடங்களை கடந்து போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தை செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தடைந்தது. இதனை முதலமைச்சர் ஸ்டாலினிடம் உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினார். பின்னர் சர்வதேச சதுரங்க போட்டிக்கான தீபத்தினை, சதுரங்க விளையாட்டு வீரர்கள் விஜயலட்சுமி சுப்பராமன், டி . குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

தமிழ் கலாச்சாரம்: இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஆறு அணிகளைச் சேர்ந்த 30 வீரர்கள் பங்கேற்கின்றனர்.இந்நிகழ்வில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரலாறு, திருக்குறள், சிலப்பதிகாரம், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, சிலம்பம், தமிழர்களின் கட்டிடக்கலையை விளக்குகின்ற வகையில் தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரை கோயில், திருவள்ளுவர், பாரதியார் பாரதிதாசன் என கலை இலக்கியச் சான்றோர்கள், தமிழ்நாட்டின் வரலாறுகளையும் பெருமைகளையும் பறை சாற்றுகின்ற வகையில் மெய்நிகர் காணொளி காட்சி நடைபெற்றது.

காணொளி காட்சிகளுக்கான பின்னணி குரலை நடிகர் கமலஹாசன் கொடுத்துள்ளார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வசனத்துடன் 10 நிமிட வீடியோ நிறைவடைந்து. முன்னதாக மணல் சிற்ப ஓவியம், 186 விளையாட்டு வீரர்களின் கொடி அணிவகுப்பு மரியாதை, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனம் ஆகியவையும் அரங்கேறின.

கருப்பு காய்கள்: தொடர்ந்து ஒரு கையில் 'மிஷன் இம்பாசிபிள்' மறுகையில் 'ஹாரி பாட்டர்' என அசத்திய லிடியன் நாதஸ்வரத்தின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அணிகளுக்கான சதுரங்க காய்களின் நிறத்தைத் தேர்ந்தெடுத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட்: மெய் சிலிர்க்க வைத்த தமிழ் கலாச்சாரத்தின் மெய்நிகர் காட்சி!

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வில், தமிழ் கலாச்சாரத்தின் மெய்நிகர் காட்சிகள் வெளியாகி அரங்கை அதிர வைத்தது. இதில் இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி கருப்பு காய்களின் நிறத்தைக் கொண்டு விளையாட உள்ளன. 1927 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இப்போட்டி முதன் முறையாக இந்தியாவிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவில் முதன் முறையாகவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 44th Chess Olympiad - தமிழ்நாடு அரசைப் பாராட்டிய பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.