ETV Bharat / state

Chennai Suburban Railway: சென்னை பீச் டூ சிந்தாரிப்பேட்டை இடையே 7 மாதத்திற்கு ரயில் சேவை ரத்து.. மாற்று ஏற்பாடுகள் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 7:11 PM IST

சென்னை பீச்- சிந்தாரிப்பேட்டை இடைய பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்!
சென்னை பீச்- சிந்தாரிப்பேட்டை இடைய பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்!

Chennai Suburban Train: சென்னை கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவைகள் ஆகஸ்ட் 27 முதல் 7 மாதங்களுக்கு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செண்ட்ரல் செல்லும் பேருந்துகள் சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாகக் கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை தான் ரயில் சேவை இருந்ததுள்ளது. இதனையடுத்து பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. தற்போது, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து நெரிசலையும், பயண நேரம் குறைப்பதற்கும் சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாரிப்பேட்டை, மயிலாப்பூர், திருவான்மியூர் வழியாக வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை 1997ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. சென்னை புறநகர்ப் பகுதியிலிருந்து, சென்னை நகருக்குள் வேலைக்கு வருபவர்கள் இடைய இந்த பறக்கும் ரயில் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், வேளச்சேரி வரை இருந்த பறக்கும் ரயிலானது, பரங்கிமலை வரை நீடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 4-ஆவது வழித்தடத்திற்கு பணிகள் நடைபெற உள்ளது.

4வது வழித்தடம்: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4வது ரயில் பாதை அமைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ரூ.280 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்ததுள்ளது. இந்த 4-ஆவது பாதைக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த 4வது, ரயில் பாதை காரணமாக, வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே உயர்மட்ட பாதை ரயில்கள் (மேம்பாலத்தில் செல்லும் ரயில்) இன்று (27.08.2023) முதல் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புறநகரிலிருந்து கடற்கரை வரை: சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கும்மிடிப்பூண்டி, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்குக் கடற்கரை வழியாகத் தினமும் 59 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டிருந்தன. இந்த 59-ரயில்களும், கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. மேலும், சென்னை கடற்கரை முதல் சிந்தாரிப்பேட்டை வரை 7 மாத காலத்திற்கு, பறக்கும் (சென்னை கோட்டை, பூங்கா ரயில்நிலையம், சிந்தாரிப்பேட்டை) ஆகிய 3 ரயில்நிலையங்களில் அதாவது 3.53 கிலோ மீட்டர் இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது எனச் சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: எண்ணும் எழுத்தும் திட்டத்தை 3வது நபர்களை வைத்து ஆய்வு செய்வதா? - ஆசிரியர்கள் கொந்தளிப்பு

சென்னை - எழும்பூர் இடையேயான புதிய வழித்தடம் சுமார் ரூ.279 கோடி ரூபாய் மதிப்பில் அமைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவுபெற்ற பிறகு பறக்கும் ரயில் சேவை மீண்டும் பழையபடி தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் சேவை மாற்றம் காரணமாகச் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் இதனைப் பரிந்துரை செய்துள்ளது. மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பை மாநகர போக்குவரத்துக் கழகம் விரைவில் வெளியிட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான புதிய வழித்தடம் சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது, இதனைக் கருத்தில் கொண்டு பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவுபெற்ற பிறகு பறக்கும் ரயில் சேவை மீண்டும் பழையபடி தொடங்கும். மேலும் புறநகர்ப் பகுதியிலிருந்து வேளச்சேரி வரும் ரயில்கள் அனைத்தும் இனி கடற்கரை வரையிலும் தான் ரயில் சேவை இருக்கும்.

மேலும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகக் கூடாது என்று, சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் சேவை மாற்றம் காரணமாகச் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் இதனைப் பரிந்துரை செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திசையன்விளை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு - வசமாக சிக்கிய மருத்துவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.