ETV Bharat / state

ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிப்பு - 4 பேர் கைது

author img

By

Published : Dec 2, 2022, 9:53 PM IST

நில அபகரிப்பு வழக்கில் 4 பேர் கைது
நில அபகரிப்பு வழக்கில் 4 பேர் கைது

10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, 1987ஆம் ஆண்டே பத்திரப் பதிவு செய்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து வேறு நபர்களுக்கு விற்ற பெண் உள்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை: தியாகராய நகர், உஸ்மான் சாலை பகுதியைச்சேர்ந்தவர், பாஸ்கரன் என்கிற பழனி பாஸ்கரன். இவருக்கு தாம்பரம் அடுத்த ஆத்தனஞ்சேரி கிராமத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.69 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த நிலத்தை சிட்லபாக்கம் பகுதியைச்சேர்ந்த பிரமிளா(49)என்பவர், அவரது தம்பி கிருஷ்ணகுமார் (46) என்பவர் உடன் சேர்ந்துகொண்டு சென்னை யானை கவுனி பகுதியைச்சேர்ந்த நிலத் தரகர் மோகன்(69) உதவியின் மூலம் பிரமிளாவின் தாயார் ஜெயலட்சுமி பெயரில் 1987இல் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயார் செய்து உள்ளனர்.

அதன்பின்பு பிரமிளா தன் மகன் வெங்கடேசன் பெயரில் கடந்த 2017ஆம் ஆண்டு போலி ஆவணம் மூலம் மோசடி செய்து, இடத்தைப் பத்திரம் செய்து கொடுத்துள்ளார். போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி பல்வேறு நபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்திற்கு விற்பனை பத்திரம் செய்து கொடுத்து மோசடி செய்து உள்ளார்.

இத்தகவலை அறிந்த பழனி பாஸ்கரன் தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து வரும் நான்கு பேர் மீதும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நான்கு நபர்களையும் மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து போலி ஆவணங்களைக் கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய நான்கு நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈ.பி.எஸ். குறித்து கருத்து வெளியிட அறப்போர் இயக்கத்திற்கு இடைக்காலத்தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.