ETV Bharat / state

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்; 9 காவல் அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 1:37 PM IST

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: 9 காவல அதிகாரிகளுக்கு சென்னை கமிஷ்னர் பாராட்டு!
பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: 9 காவல அதிகாரிகளுக்கு சென்னை கமிஷ்னர் பாராட்டு!

Chennai Commissioner: ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீச முயன்ற சம்பவத்தில் எந்தவொரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்ததாக 9 காவலர்களுக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கினார்.

சென்னை: கிண்டியில் ஆளுநர் மாளிகை 1வது நுழைவு வாயில் முன்பு கடந்த அக்டோபர் 25 அன்று பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை ஆளுநர் மாளிகை நோக்கி வீசிய கருக்கா வினோத் என்ற ரவுடியை போலீஸார் மடக்கி பிடித்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் சாதுரியமாக செயல்பட்டதாக 9 காவல் அதிகாரிகளை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், நேற்று (அக்.28) காவலர்களை நேரில் அழைத்து சான்றிதழ்களை வழங்கி, பாராட்டுகளை தெரிவித்தார்.

குண்டு வீசிய கருக்கா வினோத்தை கிண்டி காவல் துறையினர் கைது செய்து, நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட்டு பிறகு புழல் சிறையில் அடைத்தனர். இந்த சர்ச்சை மிகப்பெரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து ஆளுநர் மாளிகை பல அறிக்கைகளை வெளியிட்டது.

அதில், முக்கியமாக இந்த சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றி விசாரணை நடத்தப்படவில்லை எனவும், காவல் துறையினர் நியாயமான விசரணையைத் தொடங்க வேண்டும் எனவும் குறிபிட்டனர். மேலும், கருக்கா வினோத்தை தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் எனவும், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஓரே ஒரு நபர் என்றும், ஆளுநர் மாளிகை சொல்வதைப் போல பலர் ஈடுபடவில்லை என விளக்கமளித்தனர். இதற்கிடையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ஆர் ரகுபதி, ஆளுநர் மாளிகை சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடியை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவைச் சேர்ந்தவர் என குற்றம் சாட்டினார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

இதற்கு சம்பந்தபட்ட ஆதாரங்களை திமுகவின் ஐடி விங் X தளத்தில் பதிவிட்டது. மற்றொரு புறத்தில் கருக்கா வினோத்தை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே எடுத்தது திமுக நிர்வாகிகள்தான் என தமிழ்நாடு பாஜக சார்பில் கூறப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.