சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து உள்ளார். விவசாயிகள் மட்டுமின்றி தமிழ்நாடு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் எடிப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பால் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கும்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மட்டும் வயிற்றில் புளியை கரைக்கிறது" என்றார்.
மேலும், முதலமைச்சர் அறிவித்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பணிகளை தொடர்ச்சியாக செய்ய டெல்லிக்கு செல்கிறேன். வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ள விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும். மேலும், மக்களை பாதிக்காத வகையில் பணிகள் நடக்கும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் ஐயப்பன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரசில் இருந்து திமுக சென்று திமுகவின் பிரசார பிரங்கியாக உள்ள அப்பாவுவின் கூட்டாளி தான் ஐயப்பன். இதற்கு அப்பாவு, எல்போர்டு உதயநிதி, முந்திரிக்கொட்டை மு.க. ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டிற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின்