ETV Bharat / state

’மக்கள் பிரதிநிநிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க’ - சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Sep 24, 2021, 6:37 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்: நாமக்கல்லின் கபிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கிராம பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர்கள் ஆகியோர் நில அபகரிப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் காரணமாக பிரதான குடிநீர் குழாயில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்ததாகக் கூறி, அவரது வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ரூ. 10 லட்சம் இழப்பீடு கோரலை ஏற்க மறுப்பு

இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (செப்.24) நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி, “மக்களுக்காக சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எழும் புகார்கள் குறித்து அரசு விசாரிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலானது. அவர்கள் மீது எந்த கருணையும் காட்டாமல், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அலுவலர்களை மிரட்டும் நோக்கில் ரூ. 10 லட்சம் இழப்பீடு கோருவதை ஏற்க முடியாது. இரு தரப்பினரின் புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- டெல்லியில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.