ETV Bharat / state

பெருங்குடி குப்பைக்கிடங்கை மீட்கும் பணி; பயோ மைனிங் செய்ய மாநகராட்சி திட்டம்

author img

By

Published : Jan 5, 2023, 6:33 PM IST

பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும்போது சுற்றுச்சூழல் பூங்கா, சி.என்.ஜி பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு ஏற்ப பயோ மைனிங் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெருங்குடி குப்பை கிடங்கை மீட்கும் பணி; 5 திட்டங்களுக்கு ஏற்ப பயோ மைனிங் செய்ய மாநகராட்சி திட்டம்
பெருங்குடி குப்பை கிடங்கை மீட்கும் பணி; 5 திட்டங்களுக்கு ஏற்ப பயோ மைனிங் செய்ய மாநகராட்சி திட்டம்

சென்னை: வட சென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில் ஒரு நாளைக்கு 2,800 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் கொடுங்கையூரில் சுமார் 269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.

அதேபோல் தென் சென்னையில் சேகரிக்கப்படும் 2,600 டன் குப்பைகள், பெருங்குடியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. மலை போல் இருக்கும் குப்பைகளைப் பிரித்து நிலத்தை மீட்க கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் ரூ.648 கோடி செலவிலும், பெருங்குடி குப்பைக் கிடங்கில் ரூ.350 கோடி செலவிலும் பயோ மைனிங் முறை பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும்போது சுற்றுச்சூழல் பூங்கா, சி.என்.ஜி பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது பெருங்குடி குப்பைக் கிடங்கில் காய்கறி மற்றும் வீட்டுக்கழிவுகள் ஆகிய மட்கும் குப்பைகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு அவற்றிலிருந்து உரம் தயாரிக்கப்படுகின்றது.

மேலும் நெகிழிகள், துணிகள், பாட்டில்கள், கற்கள் உள்ளிட்டவை தனியாக பிரித்தெடுக்கப்பட்டு சிமென்ட் ஆலை, சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்படுகின்றன. நிலத்தை மீட்டெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அப்படி நடைபெற்று வரும் பொழுதே சுற்றுச்சூழல் பூங்கா, சி.என்.ஜி பூங்கா, உரம் தயாரிக்கும் ஆலை, பொருட்கள் மீட்பு வசதி கொண்ட ஆலை, சேகரிக்கப்பட்ட புதிய கழிவுகளை பயோமைனிங் செய்ய வசதி ஆகிய 5 திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பயோ மைனிங் முறை செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான நிதி தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் துறையிடம் இருந்து பெற்று கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: vandalur zoo: உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த ஊழியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.