ETV Bharat / state

அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட தனியார் பள்ளிகள்.. அதிகாரிகள் போட்ட அதிரடி ஆணை!

author img

By

Published : Jun 2, 2023, 12:02 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழக அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என அப்பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தினை கற்பிக்கும் பள்ளிகள் கோடைவிடுமுறைக்குப் பின்னர் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறையின் நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் கோடை மழை தொடங்காமல், வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் வெளியிலின் தாக்கம் குறைந்த பின்னர் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பல்வேறுத் தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட படி 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், பள்ளிகள் திறக்கப்படும் என்பதை மாற்றி, ஜூன் 7ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். மேலும் இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட இந்த தேதிக்கு முன்பாக எந்த பள்ளியும் திறக்கப்படக் கூடாது எனவும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் காரை குறிவைத்து கொள்ளை - காவல் துறை அளித்த விளக்கம்

ஆனால் தமிழக அரசின் இந்த உத்தரவை மீறி ஒரு சில தனியார்ப் பள்ளிகள் குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகள் திறக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் அறிவுறுத்தினர்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, "கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ம் தேதிக்குத் தள்ளி வைத்திருந்தோம். இந்நிலையில் அதையும் மீறி தனியார்ப் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு காட்ட வேண்டும்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.