ETV Bharat / state

விமான நிலையத்திற்குள் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த தொழிலதிபரால் பரபரப்பு!

author img

By

Published : May 18, 2023, 8:57 PM IST

சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்ல வந்திருந்த தொழிலதிபரின் பையில் 7 துப்பாக்கி குண்டுகள் இருந்தை அறிந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பயணியை பிடித்து விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து, திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து விமானத்துக்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் (50) என்பவர் இந்த விமானத்தில் திருச்சி செல்ல வந்திருந்தார். மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவருடைய உடமைகளை பரிசோதித்தனர். அவருடைய ஒரு பையில் அபாயகரமான பொருட்கள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பையை தனியே எடுத்து வைத்தனர்.

அதோடு பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் பயணி அந்தப் பையில் அபாயகரமான பொருள் எதுவும் இல்லை என கூறினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பையை திறந்து பார்த்து சோதித்தபோது அந்தப் பைக்குள் 7 துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரை சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தொழிலதிபரான அவர் தனது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்ஸ் பெற்று கை துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அந்த துப்பாக்கியில் பயன்படுத்துவதற்கான துப்பாக்கி குண்டுகள் தான் இவைகள் என்று தெரியவந்தது. இவைகளை விமானத்தில் அனுமதியின்றி எடுத்துச் செல்லக்கூடாது என்பது தனக்கு தெரியும் என்றும் தவறுதலாக தனது கார் ஒட்டுநர் இந்தப் பையை மாற்றி வைத்துவிட்டதாகவும் அந்த தொழிலதிபர் கூறினார்.

இதையடுத்து காவல் துறையினர் அவருடைய ஒரிஜினல் லைசென்ஸ் போன்றவைகளை ஆய்வு செய்தனர். அதன் பின்பு அவரிடம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி; பேருந்தை நொறுக்கி சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.