ETV Bharat / state

மழை வெள்ளம்...பொதுமக்களை மீட்க படகுகள் தயார்

author img

By

Published : Nov 12, 2022, 7:35 AM IST

மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க படகுகள் தயார்
மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க படகுகள் தயார்

தாம்பரம் அருகே அடையாற்று கரையோர பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றதன் மூலம் நேற்று(நவ.11) இரவு முதல் சென்னை மற்றும் புறநகரில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனையடுத்து புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தால் அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள முடிச்சூர்,பரத்வாஜ் நகர்,பி டி சி கோட்ரஸ், ராயப்பா நகர் உள்ளிட்ட பகுதிகள் பெருமளவு வெள்ள பாதிப்பு ஏற்படும்.

மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க படகுகள் தயார்
மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க படகுகள் தயார்

அதனால் முன்கூட்டியே அடையாற்றை அகலமாக தூர்வரப்பட்டு சீர் செய்யப்பட்டதன் மூலம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தற்போது வரை பெய்து வரும் மழைக்கு அந்த பகுதிகளில் பெருமளவு பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் நேற்றிரவு முதல் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க படகுகள் தயார்
மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க படகுகள் தயார்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்யக்கூடம் என எதர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாற்று ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளில் பொது மக்களை மீட்க ஆறு மீனவ படகுகளை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளை இயக்க மீனவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க படகுகள் தயார்
மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க படகுகள் தயார்

இதையும் படிங்க: தொடரும் மழை...கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.