ETV Bharat / state

கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை

author img

By

Published : Aug 29, 2022, 12:41 PM IST

கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை
கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை

சென்னை: செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம், கோப்ரா. இப்படத்தில் விக்ரம், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படம், விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனிடையே கோப்ரா படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம், சட்ட விரோதமாக 1788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், “பல மாதங்கள் உழைப்பில் மிகுந்த பொருட்செலவில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளனர். ஆகவே திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்” என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி, “கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "நான் கடைசி வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இருப்பேன்"... நடிகர் விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.