அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை

author img

By

Published : Nov 18, 2022, 11:00 PM IST

அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில்  அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை முதல்முறையாக வெற்றிக்கரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அரசு கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை முதல்முறையாக Balloon Kyphoplasty முறையில் வெற்றிகரமாக நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குனரும், கல்லூரி முதல்வருமான சாந்திமலர் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறையின் தலைவர் கோட்டீஸ்வரன், ’கும்மிடிபூண்டியைச் சேர்ந்த 40 வயது விவசாய தொழிலாளி கீழே விழுந்து தண்டுவட எலும்பு முறிவு ஏற்பட்டு, வலியால் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார். அவர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் தண்டு வடத்தில் ஒரு எலும்பில் உடைப்பு இருந்ததை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு நரம்பியல் அறுவை துறையில் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்முறையாக வெளிநாடுகளில் செய்யப்படும் ’Balloon Kyphoplasty’ என்ற முறையில் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டனர். அதனைத் தொடர்ந்து நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறையின் தலைவர் தலைமையிலான குழுவினர், நோயாளிக்கு அறுவை சிகிச்சையை செய்தனர். அவர் ஒரே நாளில் குணமடைந்து வீட்டிற்குச் சென்று விட்டார்.

அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில்  அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை

தண்டுவடத்திற்கான எலும்பில் பாதிப்பு ஏற்பட்டால் நடப்பது, சிறுநீர் கழித்தல் போன்றவற்றில் பிரச்னை ஏற்படும். மேலும் அறுவை சிகிச்சை செய்தாலும் குறைந்தது 3 மாதம் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், ’Balloon Kyphoplasty’ அதி நவீன முறையில் சிகிச்சை முடிந்த மறுநாளே நோயாளி குணமடைந்து வீட்டிற்குச் சென்று விட்டார்.

அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில்  அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை

’Balloon Kyphoplasty’ என்ற முறையில் இதற்கான கருவி மற்றும் சிமெண்ட் உள்ளிட்டவை வர வைக்கப்படுகிறது. அதன் பின்னர் நோயாளியின் தண்டுவடத்தில் ஊசி செலுத்தப்படுகிறது. அதன் பின்னர் உடைந்தப்பகுதியை விரிவுப்படுத்துவதற்கான பலூன் செலுத்தப்படுகிறது.

அந்த பலூனை வெளியே எடுத்தபின்னர், எலும்பில் உடைந்த பகுதியில் பிரத்யேகமான சிமென்ட் கலவை செலுத்தப்பட்டு, உடைந்த எலும்பு ஒட்ட வைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது தண்டுவடத்தில் கூடுதலாக சிமென்ட் செலுத்தப்பட்டால், பாதிப்பு ஏற்படும். ஆகையால், அதனை மிகவும் துல்லியமாக செய்ய வேண்டும் என நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறை மருத்துவர் தெரிவித்தார்.

மேலும் இந்த சிகிச்சையை வயதானவர்கள், பெரிய அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காதவர்களுக்கும் எளிதாக செய்ய முடியும். உடலில் சிறியத்துளை மட்டுமே அறுவை சிகிச்சையின் போது போடப்படும். மேலும் சிகிச்சை முடிந்த மறுநாளே நோயாளி வழங்கம் போல் நடக்க முடியும். எந்தவிதமான ஒய்வும் எடுக்கத்தேவையில்லை.

இந்த அறுவை சிகிச்சை கருவியின் மதிப்பு மற்றும் சிகிச்சைக்கான செலவு ரூ.3 லட்சம் வரையில் ஆகும். ஆனால் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக முதல்முறையாக செய்து முடிக்கப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏழு அரசு மருத்துவமனைகள்: விரைவாக கட்டுமானப் பணிகள் தொடங்க அமைச்சர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.