ஆயுத பூஜை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

author img

By

Published : Oct 11, 2021, 5:25 PM IST

ஆயுத பூஜை - போக்குவரத்து மாற்றம்

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பேருந்து இயக்கப்பட உள்ளதால் நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை : ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏராளமானோர் பயணம் செய்வார்கள், பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) மற்றும் மாநில விரைவு போக்குவரத்து கழகம் (SETC) மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த வருடங்களில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு ஆயுத பூஜை விழாவிற்காக 12.10.2021, 13.10.2021 ஆகிய தேதிகளில் 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையம்

தாம்பரம் , பூந்தமல்லி , கோயம்பேடு ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை செய்து வருகிறது.

சிறப்பு ஏற்பாடு


இந்நிலையில் கோயம்பேட்டிலிருந்து பயணிகள் சிறப்பு பேருந்து நிலையங்களை அடைய, மாநகர் போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

கோவிட் விதிமுறைகள்

பயணிகள் தங்கள் பயணத்தின் போது அனைத்து கோவிட் விதிமுறைகளையும் பின்பற்றுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

* கோயம்பேடுலிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் அனைத்து டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் தாம்பரம் செல்ல 100 அடி சாலையில் செல்லாது, அதற்கு பதிலாக பூந்தமல்லி உயர் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் டோல் பிளாசா வழியாக தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் சென்றடையும்.

* வழக்கம் போல் எஸ்சிடிசி பேருந்துகள் பூந்தமல்லி உயர் சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளி வளைய சாலை வழியாக சென்று வண்டலூரை சென்றடையும். இந்த பேருந்துகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வழியாக செல்லாது.

* இதேபோல் கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி உயர் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் டோல் பிளாசா, பெருங்களத்தூர் வழியாக செல்ல வேண்டும்.

கிழக்கு கடற்கரை சாலை


* கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (OMR, ECR) வழியாக அனுமதிக்கப்படும். இந்தப் பேருந்துகள் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களைக் ஒட்டிக் கொண்டு செல்ல வேண்டும்.

* ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, சிஎம்ஆர்எல், ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் முன் பூந்தமல்லி உயர் சாலை ஆகியவற்றில் பயணிகளை ஏறுவதைத் தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு, தாம்பரம் அல்லது வண்டலூரிலிருந்து செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

* கோயம்பேட்டில் இருந்து அனைத்து பயணிகளுடன் புறப்படும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரைத் தவிர்த்து வண்டலூரை அடைய பிஎச் சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளி வளைய சாலை வழியாக செல்ல வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Conclusion: தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.