ETV Bharat / state

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி தற்கொலை.. ஹெல்மேட் அணியாததால் இளைஞர் பலி உள்ளிட்ட சென்னை க்ரைம் செய்திகள்!

Chennai Crime News: சென்னையில் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் சென்ற இளைஞர் மரணம், வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி தற்கொலை என சென்னையில் நிகழ்ந்த க்ரைம் செய்திகள் குறித்து பார்க்கலாம்.

ஹெல்மெட் அணியாததால் வாலிபர் உயிரிழப்பு
வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியரிங் பட்டதாரி தற்கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 7:27 PM IST

சென்னை: பாடி 200 அடி சாலையில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்திற்கு அருகே நேற்று (28.08.2023) நள்ளிரவு பராமரிப்பு வேலை பார்ப்பதற்கு லோடு வேன் மூலம் ஆட்களை அழைத்து வந்துள்ளனர். பின்னர், லோடு வேனை சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் ஓரமாக நிறுத்தி விட்டு வேலை பார்த்து வந்துள்ளனர்.

அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சாலையின் ஓரம் நின்றிருந்த லோடு வேன் மீது மோதி உள்ளது. அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த நபர் மற்றும் சாலையில் அருகில் வேலை பார்த்து வந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) எனவும் ஹெல்மெட் அணியாமல் வந்ததும் தெரியவந்தது. மேலும், காயமடைந்த நபர்கள் யுவராஜ் மற்றும் ஏழுமலை என்பதும் தெரியவந்துள்ளது. கவனக்குறைவால் வாலிபர் லோடு வேன் மீது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மோட்டார் வாகனச் சட்டப்படி இரு சக்கர வாகனத்தில் பயனிப்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும்.

வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி தற்கொலை: நெசப்பாக்கம் மஞ்சு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (46) . இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு நவீன் குமார் (25) மற்றும் அஜித்குமார் (23) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இளைய மகனான அஜித்குமார் சிவில் பொறியியல் படித்து விட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக மணப்பாக்கத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அஜித் குமாரை அந்நிறுவனம் வேலையிலிருந்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

வேலையை விட்டு நிறுத்தியதால் அஜித் குமார் கடந்த ஒரு மாதமாக யாரிடமும் பேசாமல் மன உளைச்சலிலிருந்து வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.பின்னர், அஜித்குமார் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை என கூறுகிறனர். இந்த நிலையில் நேற்று(28.08.2023) இரவு தூங்க சென்ற அஜித் படுக்கை தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை  எதற்கும் தீர்வல்ல!
தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கு.. ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.