ETV Bharat / state

திருமண ஆசைக் காட்டி சிறுமி பாலியல் வன்புணர்வு!

author img

By

Published : Jul 16, 2021, 1:55 PM IST

சென்னை ஆவடி அருகே 15 வயது சிறுமியை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

aquest arrest in pocso for child abuse  chennai aquest arrest in pocso for child abuse  child abuse  pocso act  chennai news  chennai latest news  திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சென்னை திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சென்னை ஆவடியில் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சென்னை செய்திகள்  பாலியல் வன்புணர்வு  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு
பாலியல் வன்புணர்வு கொடுத்த நபர் கைது

சென்னை: ஆவடியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த ஜூலை 1 ஆம் தேதி வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர், வெகு நேரமாக வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடியும், அவளை பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

aquest arrest in pocso for child abuse  chennai aquest arrest in pocso for child abuse  child abuse  pocso act  chennai news  chennai latest news  திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சென்னை திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சென்னை ஆவடியில் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சென்னை செய்திகள்  பாலியல் வன்புணர்வு  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு
போக்சோவில் கைது

இதில், செங்குன்றம், நல்லூர், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (32) என்ற கூலித்தொழிலாளி சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிறுமியை கடத்திய வெங்கடேசனை தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 16) தலைமறைவாக இருந்த வெங்கடேசனை காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர், இருவரையும் திருமுல்லைவாயல் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி வெங்கடேசன் கடத்தி சென்று, செங்குன்றத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர், அவரை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு டெங்கு- அச்சத்தில் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.