ETV Bharat / state

பி.இ, பி.டெக் பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

author img

By

Published : Sep 19, 2021, 8:25 PM IST

announcement-of-be-btech-general-consultation-date
announcement-of-be-btech-general-consultation-date

பி.இ, பி.டெக் பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கான கலந்தாய்வு சுற்று வாரியாக நடைபெறும் தேதியை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை : பிஇ,பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு 27ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரையில் நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் பாடப்பிரிவில் சேர்வதற்கு ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. 1 லட்சத்து 74 ஆயிரத்து 490 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்த போதும் 1 லடசத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் மட்டுமே விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியிருந்தனர்.

அவர்களில் 2 ஆயிரத்து 722 மாணவர்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்கள். தகுதியில்லாத மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்து 290 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தகுதியான 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இவர்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கான கலந்தாய்வு அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்விற்கான பணம் செலுத்துவதற்கு இரண்டு நாள்களும், கல்லூரிகளை தேர்வு செய்ய இரண்டு நாள்களும், தற்காலிக ஒதுக்கீட்டு உத்தரவினை உறுதி செய்ய இரண்டு நாள்களும், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவினை உறுதி செய்ய ஒரு நாளும் வழங்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு தேதி அறிவிப்பு
கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தரவரிசைப்பட்டியிலில் 1 முதல் 14 ஆயிரத்து 788 வரை இடம்பெற்றவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

14 ஆயிரத்து 789 முதல் 45 ஆயிரத்து 227 வரை இடம்பெற்றவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை 2ஆவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

45 ஆயிரத்து 228 முதல் 86 ஆயிரத்து 228 வரை உள்ளவர்களுக்கு அக்டோபர் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரையில் 3ஆவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

86 ஆயிரத்து 119 முதல் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 வரை உள்ளவர்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரையில் 4 ஆவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதையும் படிங்க : கேரளாவில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.