ETV Bharat / state

'கிரிக்கெட்டுக்கு நிகராக வளர்ந்து வரும் இறகுப்பந்து போட்டி' - அரங்கம் அமைக்க அன்புமணி கோரிக்கை

author img

By

Published : Sep 21, 2022, 7:55 PM IST

Etv Bharat அன்புமனி ராமதாஸ் கோரிக்கை
Etv Bharat அன்புமனி ராமதாஸ் கோரிக்கை

'கிரிக்கெட்டுக்கு நிகராக இறகுப்பந்து போட்டி வளர்ந்து வருகிறது. மாவட்டம்தோறும் உள்விளையாட்டு அரங்கம் அமைத்து போட்டியாளர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்' என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

சென்னை மேலகோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மாஸ்டர்ஸ் ரேங்கிங் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. 35 வயது முதல் 75 வயது வரையிலான பல்வேறு பிரிவு போட்டிகளில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு இறகுப்பந்து கழகத் தலைவரும், இந்திய இறகுப்பந்து கழக துணைத்தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழ்நாட்டில் இறகுப்பந்து போட்டி, கிரிக்கெட் போட்டிக்கு நிகராக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் உள் விளையாட்டு அரங்குகள் அமைத்து ஊக்குவிக்க வேண்டும். இறகுப்பந்து போட்டியின் சர்வதேச போட்டியான (BWF) போட்டியை தமிழ்நாட்டில் நடத்தினால் இங்குள்ள போட்டியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'தற்போது ஆர்எஸ்வி வைரஸ் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவுவதால் அவர்களை வெளியில் அழைத்துச்செல்லக்கூடாது. பள்ளி மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால், பாதிப்பு ஏற்படும் அந்தந்த ஒன்றியம் மற்றும் மண்டலத்திலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்' என்றும் கேட்டுகொண்டார்.

'கிரிக்கெட்டுக்கு நிகராக வளர்ந்து வரும் இறகுப்பந்து போட்டி' - அரங்கம் அமைக்க அன்புமணி கோரிக்கை

அதேபோல், 'இன்ப்ளூயன்ஸா என்பது பொதுவாக ஆண்டுதோறும் வரும் காய்ச்சல் என்பதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்' என்றும் அறிவுறுத்தினார். மேலும், பாமக 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், காலநிலைமாற்றம் பெரும் பிரச்னையாக உள்ளதால், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து பாமக 2.0 செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், காலநிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் பாதிப்பை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு 2026ஆம் ஆண்டில் ஒருமித்த கருத்துகொண்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம் என்றும்; 2024ஆம் ஆண்டில் அதற்கான வியூகத்தை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தர்மபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தான் மூன்று நாள்கள் மேற்கொண்ட நடைபயணத்திற்கு ஒட்டுமொத்த தர்மபுரி மக்களும் ஆதரவளித்ததாகவும், அதுபோல் இந்தியா முழுவதினையும் ஒருங்கிணைக்க தமிழ்நாட்டில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைப்பயணத்திற்கும் மக்களிடம் மாற்றம் ஏற்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: 'ஆதார்' படத்தின் திரைக்கதை நூலை வெளியிட்டார் சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.