ETV Bharat / state

2023 - 24ஆம் ஆண்டில் அரசு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.5,337.18 கோடி ஒதுக்கீடு

author img

By

Published : Apr 17, 2023, 6:10 PM IST

2023 - 24ஆம் ஆண்டில் அரசு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ 5337.18 கோடி ஒதுக்கீடு
2023 - 24ஆம் ஆண்டில் அரசு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ 5337.18 கோடி ஒதுக்கீடு

2023 - 24ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.5,337.18 கோடி சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: 2023-24ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.5,337.18 கோடி சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைக் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பில்,

* ’மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுப்பெண் என்ற புதிய திட்டத்தின் மூலம் 2,09,365 மாணவிகளுக்கு மாதம் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுவதால் பல பெண்கள் இளங்கலை, தொழில்பயிற்சி மற்றும் பட்டய கல்வியனை கற்று வருகின்றனர். மேலும் இதற்காக 2023-2024ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் ரூ. 349.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கடந்த 2022ஆம் ஆண்டில் 2532 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

* சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு 2023 - 2024ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2022-23ஆம் கல்வியாண்டில் 42.16 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு தைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தையல் கூலி ரூ.98 கோடி பள்ளிக்கல்வித்துறை வாயிலாக சமூக நலத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

* தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கியதில் இருந்து, மார்ச் 2023 வரை 5,928 குழந்தைகள் பெறப்பட்டுள்ளனர். (ஆண் - 1346, பெண் - 4582) இதற்காக 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.25.79 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு 2023- 24ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.92.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அரசு சேவைகள், இல்லங்கள் மூலம் 2022-23ஆம் ஆண்டில் இந்த இல்லங்களில் 626 பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். மேலும் இதற்காக 2023-2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 6.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள், 2023-24ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மதிப்பீட்டில் ரூபாய் 1.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள், 2023-24ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 59.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள், 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 16.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மூத்த குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்திற்காக வரும் 2023-24ஆம் நிதி ஆண்டில் 72 திட்டங்கள் மூலம் 35 முதியோர் பயன்பெறும் வகையில் மானியங்களுக்காக ரூ.17.04 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2023 - 24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* திருநங்கைகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்திற்கு 2023 - 24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 2.36 கோடியின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மதிப்பீட்டில் ரூ.94.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023 - 24ஆம் ஆண்டில் அரசு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ 5337.18 கோடி ஒதுக்கீடு
மகளிர் உதவி எண்கள்

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக இதுவரை 1969 பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 108 மாணவ - மாணவிகள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2023 - 2024ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் இத்திட்டத்தினை விரிவுபடுத்துவதற்காக வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 500.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* குழந்தைகள் மையங்களுக்கு மருந்து பெட்டிகள் மற்றும் சுகாதாரப்பெட்டிகள் வழங்க 2023 - 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபாய் 7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முன் பருவ கல்வி குழந்தைகளுக்கு இரண்டு இணை சீருடைகள் வழங்க 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபாய் 28.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* குழந்தைகள் மையங்களுக்கு ஆண்டு பராமரிப்புத் தொகையாக 2023-2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபாய் 12.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* திறன்மிகு குழந்தைகள் மையத்திற்கு 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபாய் 48.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* குழந்தை நல குழுக்களுக்கு 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் ஒன்பது கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* குழந்தை இல்லங்கள் 2023-2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 168.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* புறநகர் மற்றும் நகர்ப்புற குழந்தைகளுக்கான திறந்த வெளி புகலிடங்கள் 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பீட்டில் ரூபாய் 4.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இளைஞர் நீதி குழுமங்கள் 2023- 24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீடு ரூபாய் 6.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கூர்நோக்கு இல்லங்களுக்கு 2023 - 24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 10.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* குழந்தைகள் பாதுகாப்பு சேவை திட்டத்தின் கீழ் செயல்படும் கட்டமைப்புகளுக்கு 2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 53.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 2023 - 2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மொத்த ஒதுக்கீடு 7,745.12 கோடி ரூபாய் ஆகும்.

* 2023-24 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ 5337.18 கோடி சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ இவ்வாறு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: கலாசேத்திரா பாலியல் வழக்கு: விசாரணை குழு நியமனம் குறித்து விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.