ETV Bharat / state

அண்ணாமலையை நீக்க வேண்டும்..! அதிமுக போட்ட கண்டிஷன்..! பாஜகவின் ரியாக்‌ஷன் என்ன..?

AIADMK BJP alliance: அதிமுக - பாஜக இடையே தொடர்ந்து வந்த கருத்து மோதலால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுகவினர் அறிவித்த நிலையில், பாஜக மேலிடத்தை சந்தித்து அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்கினால் கூட்டணியைத் தொடரலாம் என நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

AIADMK condition to remove Annamalai from tamilnadu bjp president if the alliance with BJP is to continue
அண்ணாமலையை நீக்க வேண்டும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 11:02 PM IST

சென்னை: எதிர்கட்சிகளை சகட்டு மேனிக்கு விமர்சித்து தள்ளும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வார்த்தை கனைகளால் கூட்டணி கட்சிகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை நெடு நாட்களாகவே இருந்து வந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு சென்று வந்தவர் என அண்ணாமலை தெரிவித்த கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பதிலுக்கு அதிமுகவினரும் அண்ணாமலையை விமர்சிக்க தவறவில்லை. அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மௌனம் சாதித்து வந்தார். இந்நிலையில் அண்ணாமலை அவரது ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையைத் துவங்கும் முன் திமுக பைல்ஸ் என்னும் பட்டியை வெளியிட்டார். அதற்கு முன்னதாக இதே போல் முன்பு ஆட்சி செய்தவர்கள் குறித்த பட்டியலையும் வெளியிடுவேன். எனக்கு ஊழலை ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார்.

அதற்கு அதிமுகவினர் அண்ணாமலையை கடுமையாக கண்டித்து பேசி இருந்தனர். இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையை விமர்சித்து பேசி இருந்தார். இதனால் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி முறிவடையும் என அப்போது கருத்துகள் பரவத் துவங்கியது. இதனை அடுத்து டெல்லி சென்ற அதிமுகவினர் அமித்ஷாவை சந்தித்தனர். அந்த சந்திப்பில் அண்ணாமலையும் பங்கேற்று இருந்தார். அதனை அடுத்து கூட்டணி சுமூகமாகி விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை குறித்து ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். அண்ணாமலையின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுகவினரும், திமுகவினரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.

மேலும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அதிமுகவிற்கு பாஜகவுடன் கூட்டணி இல்லை, அதை தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என பகீரங்கமாக அறிவித்தார். அதிமுக - பாஜக இடையில் தொடர்ந்து கருத்து ரீதியான மோதல் நடைபெற்று வந்தாலும் கூட்டணி முறிவடைவது குறித்து இரு தரப்பிலும் யாரும் தெரிவிக்காமல் அது மேலிடத்தின் முடிவு என்றே தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி இல்லை என கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவைப் பொறுத்தவரையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறது.

மேலும், சமீபத்தில் டெல்லியில் நடந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டு மோடிக்கு அருகில் அமர வைக்கப்பட்டு இருந்தார். இது அதிமுகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக - பாஜக இடையில் கூட்டணியில் முறிவு ஏற்பட்டால் அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என அரசியல் கூர்நோக்கர்கள் பலவாறாக கருத்து தெரிவிக்கத் துவங்கினர்.

இந்நிலையில் அதிமுகவினர் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் நட்டா, உள்ளிட்ட தலைவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி தொடர வேண்டும் என்றால் அதிமுக-வுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வட இந்தியாவில் நிலவுமளவிற்கு செல்வாக்கு இல்லாவிட்டாலும் தற்போது கூட்டணி விவகாரத்தில் அதிமுகவின் நிபந்தனையை பாஜக மேலிடம் நிராகரித்ததாக கூறப்படுகிறது. பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக அமைச்சர் வெளிப்படையாக தெரிவித்ததால், அதிமுகவின் கோரிக்கையை பாஜக மேலிடம் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "அப்போ ஜெயலலிதா.. இப்போ அண்ணா".. அண்ணாமலையின் பேச்சால் அதிமுக - பாஜக கூட்டணி முடிவுக்கு வருகிறதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.