ETV Bharat / state

சனாதன தர்மம் குறித்த விளக்கம் கேட்டு ஆளுநருக்கு மீண்டும் கேள்வி

author img

By

Published : Jul 4, 2023, 3:28 PM IST

Updated : Jul 4, 2023, 3:37 PM IST

சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து தெளிவான விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநருக்கு RTI மூலம் மீண்டும் கேள்வி எழுப்பிய மூத்த வழக்கறிஞர் துரைசாமி
ஆளுநருக்கு RTI மூலம் மீண்டும் கேள்வி எழுப்பிய மூத்த வழக்கறிஞர் துரைசாமி

சென்னை: சனாதன தர்மம், இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் சனாதன தர்மம் குறித்து கேள்விகளை கேட்டு உள்ளார். அதில், சனாதன தர்மம், இந்தியா முழுமைக்கும் பொருந்தும் என்று சமீபத்தில் ஆளுநர் பேசி உள்ளதாகவும், மேலும் சனாதன தர்மத்தைப் பற்றிய முழுத் தகவல் உங்களிடம் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவான நிருபணம் ஆகி உள்ளது என்றும், இது சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளார்.

இதையும் படிங்க: ரேசன் கடைக்கு வந்த தக்காளி - 1 மணி நேரத்தில் காலியானதால் மக்கள் ஏமாற்றம்

இதைத் தொடர்ந்து, சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? என்றும் சனாதன தர்மத்தின்படி பிராமண சமூகமும், ஆதி திராவிடர் சமூகமும் சம அந்தஸ்தில் உள்ளனரா? அப்படியானால் சனாதன தர்மத்தின்படி பிராமண சமூகத்தினர், கழிப்பிடங்களில் துப்புரவு பணியாளர்களாக நியமிக்கப்படுவார்களா? என்று சராமாரியாக கேள்விகளை அடுக்கி உள்ளார்.

இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக மருத்துவக் குழு விசாரணை

இது மட்டுமின்றி, பார்த்தசாரதி கோயில் அர்ச்சகர்கள் சிலரை, சென்னை மாநகராட்சி கழிவறைகளில் துப்புரவு பணியாளர்களாக இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவீர்களா? என்று கேள்விகளுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கேட்டுக்கொண்டு உள்ளார். முன்னதாக சனாதன தர்மம் தொடர்பாக ஆளுநர் பேசிய நிலையில், சனாதன தர்மம் குறித்து ஆளுநரிடம் என்ன ஆதாரங்கள் உள்ளது? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கேட்டு இருந்தார்.

ஆனால், ஆளுநர் தரப்பில் எந்த பதிலும் அளிக்காத நிலையில் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்து, ஆளுநர் அலுவலக மேல்முறையீட்டு ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு மீண்டும் சனாதனம் குறித்து ஆளுநரிடம் வழக்கறிஞர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: Senthil balaji: செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Last Updated : Jul 4, 2023, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.