ETV Bharat / state

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி தமிழ் வழி சான்று சமர்ப்பிக்க அறிவுரை

author img

By

Published : Aug 18, 2022, 9:34 PM IST

முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து தமிழ் வழியில் படித்ததற்கான முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுள்ளவர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் அதற்குரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி

சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2020 - 21 ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் ஜூலை 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிப்பின்போது முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான கல்வி தகுதிகளை தமிழ் வழியில் பயின்றுள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர். அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் பொழுது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு தமிழ் பயின்றதற்கான சான்று, 11, 12 ஆம் வகுப்பு டிப்ளமோ படிப்பு தமிழில் பயின்றதற்கான சான்று, இளங்கலை பட்டத்தினை தமிழில் பயின்றதற்கான சான்று முதுகலை பட்டத்தினை தமிழில் பயின்தற்கான சான்று, கல்வியியல் இளங்கலை பட்டத்தினை பிஎட் தமிழ் பயின்றதற்கான சான்று கல்வியியல் முதுகலை பட்டத்தை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று உரிய அலுவலரின் மேல்லோப்பத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள படிவத்தில் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் ஏற்கனவே தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை ஆம் என பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவே மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இந்த விபச்சினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும் இணையதளத்தில் உள்ள மாதிரி படிவங்களில் பெற்று வைத்துக்கொண்டு இணையதளத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் இதற்குரிய இணையதள முகவரி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.