ETV Bharat / state

போதைப் பொருள் விழிப்புணர்வு: ஜெயம் ரவி குறும்படத்தை வெளியிட்ட ஏடிஜிபி!

author img

By

Published : Jan 9, 2022, 8:39 AM IST

போதைப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக ஜெயம் ரவி நடிப்பில் உருவான விழிப்புணர்வு குறும்படத்தை, தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைவர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று (ஜன.8) வெளியிட்டார்.

போதை பொருள் விழிப்புணர்வு
போதை பொருள் விழிப்புணர்வு

சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் போதை பொருள்கள் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல் துறையினரால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. குறிப்பாக முதலமைச்சரின் உத்தரவுப்படி கடந்த மாதத்தில் கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக ஆயிரத்து 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட ஆயிரத்து 221 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.35 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 299 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

பிரத்யேக தொடர்பு எண்

அதேபோல் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் கடத்தியதாக 7 ஆயிரத்து 708 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 டன் குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி கல்லூரிகள், பள்ளிகள் அருகே போதைப் பொருள்கள் விற்பவர்கள் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, பிரத்யேக தொடர்பு எண்ணும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, தமிழ்நாடு காவல்துறை குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இந்த குறும்படமானது போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குறும்படத்தில் பொதுமக்கள் போதைப் பொருள்கள் விற்பவர்கள் குறித்த தகவலை 9498410581 என்ற பிரத்யேக எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த எண் மூலமாக தகவல் அளிக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களுக்குக் கூட தெரியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக குறும்படம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குறும்படத்தை தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைவர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்...!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.