ETV Bharat / state

ரோகிணி தியேட்டர் சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது - நடிகர் விஜய் சேதுபதி ஆவேசம்

author img

By

Published : Mar 31, 2023, 7:55 AM IST

Updated : Mar 31, 2023, 9:22 AM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை ரோகினி திரையரங்கு சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது. எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டு உள்ளது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

சென்னை: சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம் நேற்று (மார்ச் 30) வெளியானது. இதனால், சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல திரையரங்குகளில் மக்கள் குடும்பமாக வந்தும் படத்தைக் கண்டு கழித்தனர். ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் படம் பார்க்கச் சென்ற நிலையில், டிக்கெட் இருந்தும் அவர்களை டிக்கெட் பரிசோதனை செய்யக்கூடிய திரையரங்க ஊழியர் உள்ளே அனுமதிக்காதது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து, பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வந்தனர். மேலும், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் குறித்து கடுமையான தனது கண்டத்தைத் தெரிவித்தார். பின்னர், ரோகிணி திரையரங்கு தரப்பில், ‘பத்து தல’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை, எனவே தான் மறுக்கப்பட்டது என்றும் பின், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், ஜி.வி.பிரகாஷ் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பலரும் தங்கள் கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவி செய்து வந்தனர்.

மேலும், நேற்று (மார்ச் 30) நடிகர் விஜய் சேதுபதி, மதுரை திருப்பலை அருகே மேனேந்தல் திடலில் அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது வாழ்வு குறித்த புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புகைப்படங்கள், மிசா சிறைச்சாலை வடிவமைப்பு உள்ளிட்டவைகள் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நமது வரலாறு என்பது நம்மை யார் ஆண்டார்கள், யார் ஆள்கிறார்கள் என்பதில் இருக்கிறது. எனவே, அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லோருக்கும் அவசியம்.

எனக்கு முதலமைச்சர் மேல் ஏற்கனவே மரியாதை உண்டு. இந்த கண்காட்சியைப் பார்த்த பின்னர், அவர் வாரிசு அரசியல் மூலம் தான் இந்த இடத்திற்கு வந்தார் என்ற கூற்றுப் பொய் என தோன்றுகிறது. நான் அரசியலுக்கு வரும் போது இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்துச் சொல்வேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை" எனத் தெரிவித்தார்.

அப்போது, ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு,"எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காகப் படைக்கப்பட்டு உள்ளது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க: Rohini Theatre Issue: தியேட்டர் ஊழியர்கள் 2 பேர் மீது வன்கொடுமை வழக்கு - முழுப் பின்னணி!

Last Updated :Mar 31, 2023, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.