மூக்கால் ஓவியம் வரைந்த ரசிகர் - சூர்யா நெகிழ்ச்சி!

author img

By

Published : Jul 25, 2021, 6:08 PM IST

சூர்யா

தனது உருவப் படத்தை மூக்கால் வரைந்த ரசிகருக்கு நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் சூர்யா தனது 46ஆவது பிறந்தநாளை கடந்த 23ஆம் தேதி கொண்டாடினார். அதனை முன்னிட்டு நடிகர் சூர்யாவுக்கு, ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்படி கேரளாவை சேர்ந்த இந்திரஜித் என்ற ரசிகர், நடிகர் சூர்யாவின் உருவத்தை மூக்கால் வரைந்து, பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

நடிகருக்கு ந்ன்றி தெரிவித்து ட்வீட் செய்த சூர்யா
நடிகருக்கு ந்ன்றி தெரிவித்து ட்வீட் செய்த சூர்யா

இதனை கண்ட சூர்யா, இந்திரஜித்தின் ஓவியம் குறித்து மைண்ட் பிளோயிங் என குறிப்பிட்டு, நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.