ETV Bharat / state

தேர்வு எழுதாத மாணவர்களைக் கண்டறிந்து இடைநிற்றலை குறைப்பதற்கு நடவடிக்கை!

author img

By

Published : May 31, 2022, 9:28 PM IST

தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து  இடைநிற்றலை குறைப்பதற்கு நடவடிக்கை
தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து இடைநிற்றலை குறைப்பதற்கு நடவடிக்கை

அரசுப் பொதுத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்வு எழுத வராததது குறித்து பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களை தொடர்புகொண்டு அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, உயர் கல்வியைத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 10,11,12ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறையால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.

நடப்பாண்டில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. பொதுத்தேர்வின்போது தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் 4 முதல் 5 விழுக்காடு பேர் பொதுத் தேர்வினை ஏதாவது ஒரு காரணத்தால் எழுதாமல் இருப்பார்கள். அவர்கள் எத்தனைப் பாடங்களுக்கான தேர்வினை எழுதவில்லையோ அந்தப் பாடங்களைத் துணைத்தேர்வின்போது எழுதி தேர்ச்சி பெறுவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான பொதுத்தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி முதல் இன்று வரையில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

நடப்பாண்டான 2022ல் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்குப் பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் உட்பட 8 லட்சத்து 44 ஆயிரத்து 808 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 32 ஆயிரத்து 457 மாணவர்கள் மாெழித்தாள் தேர்வினை( 3.84 சதவீதம் பேர்) எழுதவில்லை. ஆங்கிலம் தேர்வினை 32 ஆயிரத்து 389 மாணவர்கள் (3.83 சதவீதம் பேர்) எழுதவில்லை. அதேபோல் 3.50 சதவீதம் என்ற அளவில் மாணவர்கள் தேர்வினை எழுதாமல் உள்ளனர்.

10ஆம் வகுப்புத்தேர்வினை எழுதுவதற்கு 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 மாணவர்கள் உட்பட 9 லட்சத்து 74ஆயிரத்து 328 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 45ஆயிரத்து 18 மாணவர்கள் (4.69 சதவீதம் பேர்) என தேர்வினை எழுதவில்லை. 10ஆம் வகுப்பில் 45 ஆயிரம் என்ற அளவில் மாணவர்கள் தேர்வினை எழுதாமல் இருந்துள்ளனர். இதன் சராசரி 4.69 சதவீதம் என உள்ளது.

தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிப்படிப்பில் முற்றிலும் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கல்வித்தகவல் மேலாண்மை முறையை இணையதளத்தில் மாணவர்களின் முழு விவரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இடை நிற்றலைக் கண்டறிந்து அவர்களைத் தொடர்ந்து படிக்க வைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கரோனா தொற்றுக்குப்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்வில் வழக்கமான அளவிலேயே மாணவர்கள் தேர்வினை எழுதாமல் இருக்கின்றனர். ஆனாலும் அவர்களையும் கண்டறிந்து தொடர்ந்து கல்வி அளிக்க வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது. எனவே தேர்வினை எழுதாத மாணவர்களின் விவரங்களை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி, மாணவர் தேர்வு எழுதாமல் இருந்ததற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும் எனக் கூறியுள்ளோம்.

அதன் அடிப்படையில் மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதற்கு விரும்பினால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். வேறு காரணங்களால் வராமல் இருந்தால், அந்த மாணவரை துணைத் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தந்து, உயர்கல்வி படிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரையில் தொடரும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்; தேங்கும் கழிவுகள் - தோல்வியடைந்த பேச்சுவார்த்தை - வேதனையில் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.