ETV Bharat / state

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது

author img

By

Published : Jan 31, 2022, 2:30 PM IST

Updated : Jan 31, 2022, 2:47 PM IST

கேரள மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளாக காவல் துறையினரால் தேடப்பட்டுவந்தவர் கத்தார் நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, குடியுரிமை அலுவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது
2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது

​​​​​​சென்னை: கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்புப் பயணிகள் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் 142 பயணிகள் வந்தனர். பயணிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரபீயூக் (37) என்ற பயணியின் கடவுச்சீட்டை அலுவலர்கள் பரிசோதித்தனர். அப்போது அந்தப் பயணி இரண்டு ஆண்டுகளாக கேரள காவல் துறையினரால் தேடப்பட்டுவருபவர் என்று தெரியவந்தது.

அதாவது கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்ட்ரக் காவல் நிலையத்தில் ரபீயூக் மீது 2020ஆம் ஆண்டில் அத்துமீறி வீடு புகுந்து தாக்கி, பொருள்களைச் சேதப்படுத்தியது, ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆகையால் காவல் துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காகா ரபீயூக் வெளிநாட்டிற்குத் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார் என்று தெரியவந்தது.

மேலும் காசார்கோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ரபீயூக்கை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களுக்கும் எல்.ஓ.சி. போட்டுவைத்திருக்கிறாா் என்பது தெரியவந்தது.

உடனடியாக குடியுரிமை அலுவலர்கள், ரபீயூக்கை வெளியில் விடாமல், குடியுரிமை அலுவலக அறையில் அடைத்துவைத்தனர். அத்தோடு கேரள மாநில காவல் துறையில் இருக்கும் தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து கேரளா மாநில தனிப்படை காவல் துறையினர் ரபீயூக்கை கைதுசெய்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர்.

இதையும் படிங்க: திருமண மண்டபங்களில் கேமரா திருட்டு - ஒருவர் கைது

Last Updated : Jan 31, 2022, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.