ETV Bharat / state

கலாஷேத்ரா விவகாரம்: மாணவிகள் விசாரணையில் திடீர் திருப்பம்!

author img

By

Published : May 22, 2023, 8:03 PM IST

கலாஷேத்ரா விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜரான மாணவிகளில் 6 பேர், பேராசிரியர்கள் தங்கள் மீது அன்பும், பண்பும் வைத்து கலையை கற்றுத் தருவதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்குமணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இதில் நான்கிற்கும் மேற்பட்ட பேராசிரியர் மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து இருந்தும் தங்கியும் போராட்டம் நடத்தினர்.

இந்தத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு 'தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி' நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையின்போது நேரடியாக 12 மாணவிகளிடமும் ஆன்லைன் மூலமாக 5 மாணவிகளிடமும் விசாரணை செய்தனர்.

அதேபோல், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக தங்களது புகார் மனுக்களையும் அளித்தனர். இந்தப் புகார்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தனர்.

மேலும் புகார் அளித்த மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்த அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை அடுத்து புகார் அளித்த மாணவிகளிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ள அடையாறு மகளிர் போலீசார் மாணவிகள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதையும் படிங்க: கோவை பிரியாணியில் கருத்தடை மாத்திரையா? வதந்தியைப் பரப்பியவர் மீது பாய்ந்தது வழக்கு

இந்த நிலையில் 'ஹரி பத்மநாதன்' என்கிற பேராசிரியரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். 162 மாணவிகளுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் நேரடியாக வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜரான மாணவிகளில் ஆறு பேர் தங்களுக்கும் இந்தப் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனப் போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 14 கோடிப்பே.....கட்டிய ஏழு மாதங்களில் லேசான காற்றுக்கே பெயர்ந்து விழுந்த கேலரி மேற்கூரை!

அதில் பேராசிரியர்கள் தங்கள் மீது அன்பும், பண்பும் வைத்து கலையை கற்றுத் தருவதாகவும்; தாங்களும் அவர்கள் மீது மரியாதையும், அன்பும் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கும் இந்தப் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தாங்கள் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிளம்பர், கொத்தனார், ஓட்டுநர் தேவையா? - வருகிறது தமிழக அரசின் 'செயலி'

இந்த ஆறு மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் தனித்தனியாக இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி பதிலை தெரிவித்ததாகும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ள மற்ற அனைத்து மாணவிகளிடமும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இதயும் படிங்க: 'ஜூனியர் சுதா சந்திரன்'... காலை இழந்தாலும் கலையாத கலை ஆர்வம்... ஒரு தன்னம்பிக்கை ஸ்டோரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.