கோவை பிரியாணியில் கருத்தடை மாத்திரையா? வதந்தியைப் பரப்பியவர் மீது பாய்ந்தது வழக்கு

author img

By

Published : May 22, 2023, 5:52 PM IST

Updated : May 22, 2023, 9:52 PM IST

Etv Bharat

கோவையில் பிரியாணி கடையில், 'பிரியாணியில் இந்துக்களுக்கு கருத்தடை மாத்திரை' கலந்து கொடுப்பதாக சர்ச்சைக்குரிய பதிவை டிவிட்டரில் பரப்பியவர் மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: இன்றைய தலைமுறையினருக்கு சைவ சாப்பாட்டைக் காட்டிலும், அசைவ சாப்பாட்டின் மீது சற்றே விருப்பம் அதிகம். அதிலும், 'பிரியாணி' என்றாலே போதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். அந்தளவிற்கு பிரியாணி அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒரு உணவாக தினமும் சாப்பிடும் பிடித்த உணவாக மாறிவிட்டது எனலாம்.

ஹோட்டல்களில் இட்லி, தோசை இருக்கா? என்று கேட்டகாலமெல்லாம் மலையேறிப் போய், என்ன வெரைட்டியான பிரியாணி வைச்சிருக்கீங்க? என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டது. இந்த நிலையில், எல்லோருக்கும் மிகவும் பிடித்த இந்த பிரியாணியில், கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுப்பதாக கூறப்படுவதைக் கேட்டால் எல்லோருக்கும் எப்படியிருக்கும்?

கோவையில் பிரியாணி கடை ஒன்றில், இந்துக்களுக்கு கருத்தடை மாத்திரை கலந்த பிரியாணியை விற்பனைக்கு வழங்குவதாகவும், இஸ்லாமியர்களுக்கு கருத்தடை மாத்திரை கலக்கப்படாத பிரியாணியை விற்பனை செய்வதாகவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவின. இதனிடையே இந்த பொய்யான தகவல்களைப் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

இதையும் படிங்க: “ஃபீளீஸ் எங்க ஸ்கூல்ல பசங்கள சேருங்க”: வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் செய்த மாணவர்கள்!

இதனைத்தொடர்ந்து, இவ்வாறு தனது டிவிட்டரில் பதிவிட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரில் சமீபத்தில் ரவுடிகளுக்கு இடையே நடந்த அரிவாள் வெட்டுச் சம்பவங்கள், நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவம், இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்டவை கோவை மாநகரையே ஒரு உலுக்கு உலுக்கின. இதனிடையே இவற்றின் எதிரொலியாக, மாநகர காவல்துறையும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சை கள்ள மது விவகாரம்.. 2 பேர் கைது, 4 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!

இதனிடையே, ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரசணையில், சமூக வலைதளங்களின் மூலமாகவே பல அவதூறுகளைத் தூண்டி அசம்பாவிதங்களுக்கு வழி ஏற்படுத்தி வருகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் சமூக வலைதள கணக்குகளைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இரு தரப்பினரிடையே வன்முறையை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு பதிவு செய்திருந்த அந்த நபர் மீது தாமரைக்கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வதந்திகளைப் பரப்புவது உள்ளிட்டவைகளுக்காக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2008 ஆகியவற்றின் கீழ் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: தஞ்சை கள்ள மது விவகாரம்.. 2 பேர் கைது, 4 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!

Last Updated :May 22, 2023, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.