ETV Bharat / state

17,383 கோரிக்கைகளின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்வு

author img

By

Published : May 17, 2022, 7:28 AM IST

17,383 கோரிக்கைகளின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்வு
17,383 கோரிக்கைகளின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்வு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 17,383 கோரிக்ககைக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தீர்வு காணப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கு விண்ணப்பம் செய்து தேர்வு எழுதியவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு அதற்காக ஆவணங்களை பதிவேற்றத்தின் போது பெறப்பட்ட 17,383 கோரிக்கைகள் மீது தீர்வு காணப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மட்டும் பெறப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கூடுதல் ஆவணங்களை பதிவேற்றம் செய்திட மே 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2017-18 ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு 2021 டிசம்பர் எட்டாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பின்னர் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் தொடர்பான கூடுதல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் 2022 மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அப்பொழுது 17 ஆயிரத்து 383 தேர்வர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குழு கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2520 நபர்களுக்கான யூசர் ஐடி மற்றும் லாகின் பாஸ்வேர்டு சம்பந்தப்பட்ட தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்பட்டது.

7 ஆயிரத்து 669 விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இணையான கல்வித் தகுதி தொடர்பான கோரிக்கை மனுக்கள் வரப்பட்டுள்ளன. பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கப்படும்.

கல்வி தகுதி மற்றும் கூடுதல் கல்வித் தகுதிகள் தொடர்பாக பெறப்பட்ட 1,349 கோரிக்கை மனுக்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை ஏதுமில்லை என்பதால் அந்த கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தற்காலிக விடை குறிப்புகள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்த 120 பணிநாடுநர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தெளிவாக குறிப்பிடாத 114 விண்ணப்பதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டன. கூடுதல் சான்றிதழ்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பாக 2022 மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து கூடுதல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை மே 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யும் வகையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேதியில் மாற்றம் இருந்தால் தெரிவிக்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இரு கட்டங்களாக நடைபெறும் எனவும் முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் ஆவணங்களுடன் பணி நாடுகள் தெரிவித்துள்ள விபரங்களுடன் சரிபார்க்கப்பட்டு அறிவிப்பின்படி தேர்வானவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட அவர்களின் பட்டியல் இணையதளத்தில் ஜூன் மாதத்தில் வெளியிட தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மேல்முறையீடுகள் முடிவு செய்தவுடன் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நான்கு நாட்கள் முன்னிலையில் அசல் சான்றிதழ்களுடன் நடத்தப்பட்டு ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து விபரங்களும் வெளிப்படையான வலைதளத்தின் மூலம் தெரிவிக்கப்படும் தேர்வு நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது, மேலும் இந்த தேர்விற்கு நேர்முகத்தேர்வு இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியிட திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.