ETV Bharat / state

தமிழகத்திற்கு கடன் சுமை அடுத்த நிதி ஆண்டில் 7,26,028.83 கோடியாக இருக்கும் - நிதி அமைச்சர் பிடிஆர்

author img

By

Published : Mar 20, 2023, 11:04 PM IST

தமிழ்நாட்டில் 31.03.2024 அன்று நிலுவையில் உள்ள கடன் 7,26,028.83 கோடியாக இருக்கும் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இதுகுறித்து நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளதாவது, ' 2023-24ஆம் ஆண்டில் மாநில அரசு 1,43,197.93 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 51,331.79 கோடி ரூபாய் பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2024 அன்று நிலுவையில் உள்ள கடன் 7,26,028.83 கோடி ரூபாயாகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் சதவீதத்தில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2024-25ஆம் ஆண்டில் 25.63 சதவீதமாகவும், 2025-26 ஆம் ஆண்டில்
25.82 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. இவ்வாறு, நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடன் திருப்பி செலுத்துவதற்கான திறனை எய்த அரசு திட்டமிட்டுள்ளது. கடன் உத்திரவாதங்கள்
ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு, இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப் பெற வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டிலும் மீளப் பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.5 சதவீதம் இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப் பெற வேண்டும்.

2022ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31ஆம் தேதி அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 11.18 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 1.06 சதவீதமாகவும் உள்ளது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் சதவீதம் குறைந்து
வரும் போக்கை தடுக்க, வரி விகிதங்களை சீரமைத்தல், வசூலிப்புத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிதி திரட்டும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் விளைவாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 2022-23ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடான 1,42,799.93 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது திருத்த மதிப்பீடுகளில் 1,51,870.61 கோடி ரூபாயாக உயருமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1,81,182.22 கோடி ரூபாயாக மேலும் உயருமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் 19.30 சதவீதம் அதிகமாகும்.

வரவு-செலவுத் திட்டத்தில் கணித்தவாறு, மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளிலும் 15,309.40 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், திருத்த மதிப்பீடுகளை விட 32.10 சதவீதமாக உயர்ந்து, 20,223.51 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய வரவு செலவுத் திட்டக் கணிப்புகளுக்கு இணையாக, மத்திய வரிகளின் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் 38,731.24 கோடி ரூபாயாகவும் வரவு செலவுத் திட்டத்தில் 41,664.86 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன.

வரும் ஆண்டில் நிலுவையிலுள்ள சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக எதிர்ப்பார்க்கப்படும்
4,572.82 கோடி ரூபாயும் இதில் அடங்கும். சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறை வழங்கும் காலத்தினை ஐந்தாண்டுகளுக்கு மேல் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. இதனால் 30-06-2022 முதல் மாநிலங்கள் தாங்கள் பெற்று வந்த
ஒரு முக்கிய வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையில் உள்ள நிலுவை நீங்கலாக ஆண்டுதோறும் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் மொத்த நிதியானது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2014-15 ஆம் ஆண்டை ஒப்பீட்டுப் பார்க்கையில் ஒரு சதவீத அளவுக்கு குறைந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நிதிக் குறைவு 2022-23 ஆம் ஆண்டிற்கு சுமார் 24,840 கோடி ரூபாயாகவும் 2023-24 ஆம் ஆண்டிற்கு 28,327 கோடி ரூபாயாகவும் இருக்கும்.

ஒட்டு மொத்தமாக, திருத்த மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 2,45,659.67 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2022-23ஆம் ஆண்டின் வரவு செலவு மதிப்பீடான 2,31,407.28 கோடி ரூபாயோடு ஒப்பிடும்போது 6.16 சதவீதம் அதிகமாகும். வரும் ஆண்டில், வருவாய் வரவினங்கள் 2,70,515.23 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

31,850 கோடி ரூபாய் அளவில் வருவாய் பற்றாக்குறைக் குறைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகளுக்குப் போதுமான நிதி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்துள்ளது. மானியங்கள், நிதி பரிமாற்றங்களுக்கான செலவினங்கள், 2022-23ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்ட 1,13,643.10 கோடி ரூபாயைக் காட்டிலும் திருத்த மதிப்பீடுகளில் 1,18,841.01 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனை எடுத்துக்காட்டுகிறது. வரும் ஆண்டில், மொத்த வருவாய் செலவினம் 3,08,055.68 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினங்கள் குறைந்துள்ளதாலும், வருவாய் வரவினங்கள் அதிகரிக்கும்
என மதிப்பிடப்பட்டுள்ளதாலும், 2022-23ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 52,781.17 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட வருவாய் பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 30,476.01 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத சாதனையாக, கடந்த 2 ஆண்டுகளில் தோராயமாக
31,850 கோடி ரூபாய் அளவில் வருவாய் பற்றாக்குறைக் குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்… போராட்டம் நடத்த முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.