ETV Bharat / state

'தமிழ்நாட்டில் மேலும் 203 பேருக்கு கரோனா பாதிப்பு' - அமைச்சர் விஜய பாஸ்கர்!

author img

By

Published : May 1, 2020, 9:08 PM IST

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்ச் சந்திப்பு
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்ச் சந்திப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 203 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,526ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ’தமிழ்நாட்டில் இன்று 203 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 323லிருந்து 2 ஆயிரத்து 526ஆக அதிகரித்துள்ளது' எனக் கூறினார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

மேலும், சென்னையில் இன்று மட்டும் 176 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, தலைநகரில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 906-லிருந்து 1082-ஆக அதிகரித்துள்ளது. அதில்,

  • சென்னை 176
  • செங்கல்பட்டு 8
  • திருவள்ளூர் 6
  • கடலூர் 1
  • திண்டுக்கல் 1
  • காஞ்சிபுரம் 2
  • கரூர் 1
  • மதுரை 3
  • நாகை 1
  • தஞ்சை 2
  • விழுப்புரம் 1
  • அரியலூர் 1; என புதிதாக கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நாள் நிலவரப்படி, இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் கரோனாவால் பாதிக்கப்பட்ட 54 விழுக்காடு பேர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க...தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு யோகாசனப் பயிற்சி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.