ETV Bharat / state

'போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயற்சி' - சிக்கிய 2 இலங்கைப் பெண்கள்

சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் இலங்கையின் யாழ்ப்பாணம் செல்ல முயன்ற 2 இலங்கைப் பெண்களை சென்னை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 18, 2022, 9:44 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு நேற்று சென்ற அலையன்ஸ் ஏர் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது சென்னை முகவரிகள் கொண்ட இந்திய பாஸ்போர்ட்டுகளுடன், கங்கா சுந்தரதாசன்(46), சொர்ணகலா சுந்தரேசன்(22) என்ற 2 பெண் பயணிகள் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களில் யாழ்ப்பாணம் செல்ல வந்திருந்தனர். அவர்கள் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளை கம்ப்யூட்டர் மூலமாக ஆய்வு செய்தபோது இரண்டுமே போலியான பாஸ்போர்ட்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பெண்களின் பயணங்களையும் குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அத்தோடு அந்த இரண்டு பேரையும் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த இரண்டு பெண்களும் இலங்கையிலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சுற்றுலாப் பயணிகள் விசாக்களில் சென்னைக்கு வந்ததோடு சென்னையிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதும், இதற்கு ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து போலியான இந்திய பாஸ்போர்ட்கள் பெற்றுதும் தெரியவந்தது. அதன் மூலம் இவர்கள் தற்போது சென்னையிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு பெண்களுக்கும் போலி பாஸ்போர்ட்கள் எடுத்துக் கொடுத்த ஏஜெண்டுகள் யார்? இந்தப் பெண்கள் எங்கு தங்கியிருந்தனர்? என்று குடியுரிமை அதிகாரிகள், க்யூ பிராஞ்ச் போலீசார்(Q Branch Police), மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் (CIA) தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அந்த இரண்டு இலங்கை பெண்களையும் மேல் நடவடிக்கைக்காக சென்னை குற்றப்பிரிவு போலீசில் இன்று (டிச.18) அதிகாலையில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் இரண்டு பெண்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையில் எரிந்த நிலையில் விழுந்த பலூன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.