ETV Bharat / state

சார்மினார் எக்ஸ்பிரஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் - ரயில்வே காவல்துறை தீவிர விசாரணை

author img

By

Published : Oct 27, 2021, 10:59 PM IST

ஹைதராபாத்தில் இருந்து தாம்பரம் வந்த ரயிலில், 18 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை பெட்டியில் பயணம் செய்த 72 பேரையும் விசாரணை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையினா்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் இருக்கும்

சென்னை: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து சாா்மினாா் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தது. வழக்கம்போல ரயில்வே பாதுகாப்பு படையினா் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர்.

அப்போது, இருக்கைகளுக்கு அடியில், ஐந்து பாா்சல்களில் 18 கிலோ, உயர்ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளதை கண்டுபிடித்தனர். பின், ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளை விசாரித்தனர்.

பயணிகளிடம் விசாரணை

தொடர்ந்து, சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினா், அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் 72 பேரின் விபரங்களையும் பட்டியலை எடுத்து, கஞ்சா வியாபாரி யார்? கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் என்ற கோணத்தில் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: காங்கிரஸிற்கு டா டா... தனிக்கட்சி... கேப்டன் அமரீந்தர் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.