ETV Bharat / state

IPS officers Transfer: கோவை காவல் ஆணையர் உள்பட தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்

author img

By

Published : Nov 18, 2021, 5:05 PM IST

தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: இது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "கோவை காவல் ஆணையராக இருந்த தீபக் தாமோர் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த பிரதீப் குமார் கோவை காவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி எஸ்.பியாக இருந்த மணிவண்ணன் புளியந்தோப்பு துணை ஆணையராகவும், திருநெல்வேலி எஸ்பியாக சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விரிவாக்கம் டிஐஜியாக இருந்த பிரபாகரன் கிழக்கு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு இணை ஆணையராக இருந்த ராஜேந்திரன் போக்குவரத்து தெற்கு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டி.ஐஜி செந்தில்குமாரி விரிவாக்க டிஐஜியாகவும், எஸ்.பி மூர்த்தி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி எஸ்பியாக சுஜித் குமாரும், எஸ்பி ராஜேஷ் கண்ணன் வேலூர் எஸ்.பியாகவும், ஏ.ஐ.ஜி செல்வகுமார் தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவுக்கும், எஸ்.பி ரம்யா சைபர் அரங்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கோயம்புத்தூரில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் காவல் ஆணையர் பணியிட மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடல்நீரை குடிநீராக்க புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.