ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர 1.32 லட்சம் மாணவர்கள் பதிவு

author img

By

Published : Aug 9, 2021, 10:19 PM IST

பொறியியல்
பொறியியல்பொறியியல்

பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை, 1 லட்சத்து 32 ஆயிரத்து 264 மாணவர்கள் ஆன்லைன் வழியாக பதிவு செய்துள்ளனர்.

சென்னை: பொறியியல் படிப்புகளான பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 ந் தேதி வரை, www.tneaonline.org, www.tndte.gov.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய (ஆக.9) தினம் மாலை 5.30 மணி வரையில், பொறியியல் கலந்தாய்விற்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 264 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 557 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 81 ஆயிரத்து 870 மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: முடிவடைந்தது நேர்காணல்: அடுத்த துணைவேந்தர் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.