இன்னுயிர் காப்போம் திட்டம் - டிச., 18 முதலமைச்சரால் தொடங்கப்படும்!

author img

By

Published : Dec 7, 2021, 7:22 PM IST

மா சுப்பிரமணியன் செய்திகள்

இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ், 'நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை டிசம்பர் 18ஆம் தேதி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு: இன்னுயிர் காப்போம் திட்ட செயலாக்கம் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று (டிச.7) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருவோரின் எண்ணிக்கை, 38 லட்சத்திற்கும் மேற்பட்டுள்ளது.

மேலும், சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரைக் கருத்திற்கொண்டு, இன்னுயிர் காப்போம் என்ற திட்டம் அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான கலந்தாய்வை பல்வேறு துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.

இத்திட்டத்தின் கீழ், 'நம்மை காக்கும் 48' என்ற திட்டம், நவம்பர் 18ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

இத்திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் கிராம சாலை, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை என்று, எந்தச் சாலைகளிலும், சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவோருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க அரசு அக்கறையுடன் செயல்படும்.

இத்திட்டத்திற்கு அரசு மருத்துவமனைகள் 205 உள்பட, மொத்தம் 610 மருத்துவமனைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அட்டவணை வெளியிடப்படும். இத்திட்டத்தின்கீழ் சாலை விபத்துக்களில் சிக்கும் யாராயிருந்தாலும், அவர்களுக்கான சிகிச்சைக்காக, அரசின் சார்பாக, ஒரு லட்ச ரூபாய் சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்ளும் மகத்தான திட்டம்," என்றார்.

இதையும் படிங்க: 'அம்பேத்கரை முதலில் முழுமையாகப் படிங்க மிஸ்டர் திருமாவளவன்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.