ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

author img

By

Published : Nov 5, 2021, 10:54 AM IST

top ten news at 11 am  top ten  top news  top ten news  latest news  tamil nadu latest news  tamil nadu news  news update  today news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கிய்ச் செய்திகள்  காலை செய்திகள்  இன்றைய நிகழ்வுகள்  செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

1. 50 ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி கொண்டாட்டம் இல்லாத கிராமங்கள்

வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி கொண்டாட்டம் இல்லாமல் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வியப்பில் ஆழ்த்தும் 13 கிராமங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

2. பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. வரும் நவ.9ம் தேதி சூரசம்ஹாரமும், வரும் நவ.10ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

3. துவி பாத சிரசாசனத்தை 27 நிமிடங்கள் செய்த பள்ளி மாணவி சாதனை

திருவள்ளூரில் துவி பாத சிரசாசனம் என்னும் யோகாசனத்தை 27 நிமிடங்கள் செய்த கும்முடிபூண்டிச் சேர்ந்த பள்ளி மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.

4. 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரி - ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்

வேலூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரியில், தூர்வாராத காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகுந்துள்ளது.

5. Drunk and Drive - சென்னையில் 3 மாதங்களில் 11,077 வழக்குகள் பதிவு

சென்னையில் கடந்த 3 மாதங்களில் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக சுமார் 11 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

6. மயிலாடுதுறையில் ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக்கொலை

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆப்ரேட்டரை ஓட ஓட விரட்டிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

7. “முதலமைச்சர் வழங்கியிருப்பது பட்டா அல்ல, நம்பிக்கை” - நடிகர் சூர்யா

நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

8. டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

9. பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்த கர்நாடகா - எவ்வளவு குறைத்தது தெரியுமா?

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - போட்டியில் இருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள்

டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.