ETV Bharat / state

'10 ரூபாயில் 9 ரூபாய் 50 காசுகள் போனால் மீதம் 1 ரூபாய்' - இது அரியலூர் ரேஷன் கடையின் கணக்கு

author img

By

Published : Jan 4, 2023, 6:04 PM IST

அரியலூர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியல்
அரியலூர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியல்

அரியலூரில் ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த விலைப்பட்டியல் பலகையில் கணக்கு தவறுதலாக வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக நுகர்வோர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் என்ற ரேஷன் கடையிலும் டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த ரேஷன் கடையில், என்னென்ன பொருட்கள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது, பொதுமக்களுக்கு மலிவு விலையில் எவ்வாறு அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை விளக்கும் வகையில், ஃபிளெக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர். அந்த விலை பட்டியலில் மஞ்சள் தூள் அங்காடி விலை 8 ரூபாய், வெளி சந்தை விலை 10 ரூபாய், வித்தியாசம் 2 ரூபாய்.

உப்பு அங்காடி விலை 8 ரூபாய், வெளிச்சந்தை விலை 12 ரூபாய், வித்தியாசம் 4 என்று நீண்டபட்டியல் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அரியலூர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியல்
அரியலூர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியல்

அதில் ஓரிடத்தில் பொட்டுக்கடலை அங்காடி விலை 9 ரூபாய் 50 பைசா, வெளிச்சந்தை விலை 10 ரூபாய் வித்தியாசம் ஒரு ரூபாய் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. 10 ரூபாயில், 9 ரூபாய் 50 பைசாவை கழித்தால், மீதம் 1 ரூபாய் என வைக்கப்பட்டிருக்கும் இந்த போர்டு அப்பகுதியில் சிரிப்பலைகளை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை மதரஸாவில் மாணவர்கள் சித்தரவதை? பள்ளி உரிமையாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.